news-details
இந்திய செய்திகள்
மதமாற்றத் தடைச்சட்டம் நிறைவேற்றப்படாமலே கிறித்தவர்களுக்கு எதிராகத் தாக்குதல்! - ஜான் புடைட் விமர்சனம்!

இராஜஸ்தான் மாநிலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இதுவரை 9-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் கிறித்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும்பைபிள்ஸ் ஃபார் தி வேர்ல்டுஅமைப்பின் தலைவர் ஜான் புடைட் கூறியுள்ளார். இது தொடர்பாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 12 மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பலவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மசோதா இதுவரை சட்டமாகச் சட்டப்பேரவையில் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் மத உரிமை காக்கப்படுமா? என எதிர்பார்த்திருக்கிறோம்என்றார்.