‘காசாவிற்கு அமைதி’ என்ற இணையவழி செப விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதுபெரும் தந்தை, பிரான்சிஸ்கன் சபை துறவியாக, புனித பூமியில் 35 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வளவு கடினமான தருணத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என வேதனை தெரிவித்துள்ளார். காசாவில் வாழும் மக்கள் போர் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருவதாகவும், இருக்க இடமின்றி, வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகின்றனர். வலிமையின் மொழி தோல்வியடையும் போது, வன்முறையின் முழு கோட்டையும் இடிந்து விழும்போது, நாம் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழகு நிறைந்த புனித பூமியை அன்பு மற்றும் சாந்த குணத்துடன் மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.