news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

“தேர்தல் ஆணையம், மத்தியில் ஆளும் பா.ச.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. முழு நாட்டிலும் தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக பீகாரிலும் ‘பா.ச.க. - தேர்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி நடக்கிற து. அதாவது, தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்த (Special Intensive revision – SIR) செயல்முறை, வாக்காளர் பட்டியலில் போலிப் பெயர்கள் சேர்ப்பதையும், உயிருள்ளவர்களை ‘இறந்தவர்கள் என்று குறிப்பிடுவதையும்தான் செய்கிறது. அரசியலமைப்பையும் சனநாயகத்தையும் கேலிக்குள்ளாக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல், தேசத் துரோகத்திற்குச் சமம்!”

உயர்திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்

“தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர்களை அகற்றி, மகாராஷ்டிராவில் பா.ச.க. வெற்றிபெற்றது. இப்போது பீகாரிலும் அதைச் செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில், தேர்தலுக்கு முன்பு மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இது மாநில அரசின் நிர்வாகத்தைக் குலைக்கும் முயற்சி, பா.ச.க. ஓர் ஊழல்வாத, வாக்குத் திருடர்களின் கட்சி!

செல்வி. மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள முதல்வர்

“விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும், சமூகம் சார்ந்த விரோத மனநிலை எடப்பாடிக்கு இருக்கிறது என்கிறேன். தொடக்கத்திலிருந்து தலித் அமைப்புகளில் பணியாற்றி, இப்போது தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். என்னைப் பார்த்து, ‘பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்துகிறார் எனில், சமூக விரோத எண்ணங்கள் அவருக்குள் புதைந்திருக்கின்றன என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஒரு சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இன்னும் சாதிய விரோத மனநிலை இருப்பது வேதனையளிக்கிறது. அது தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதல்ல.”

திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்