விளையாட்டில் ஆர்வமும், ஊழியத்தில் ஆனந்தமும் உடையவரே!
சலிப்படைந்தோரையும்
விழிப்படைய செய்த இறை இனிமையே!
இளந்தலைமுறையினரில்
மகுடமான
இந்நூற்றாண்டின்
பெருமையே!
திவ்யநற்கருணை
புண்ணியத்தை வாழ்ந்தும்
வாழ்வாக்கவும்
முனைந்தவரே!
அதிகதிகமாய்
இறை உடனிருப்பில் மகிழ்வு கண்டவரே!
பெற்றோரையே
இறைபதம் சேர்ப்பித்த அதிசயமே அற்புதமே!
கணினியைத்
தன்வசப்படுத்தி இறைசெய்திக்கு உட்படுத்தியவரே!
ஒவ்வொரு
வேளையிலும் ஒவ்வொரு பணியிலும்
நற்கருணை
நாதரை நாடியவரே!
ஒப்புரவின்
மகத்துவத்தில் உறவாடி உயிர்நாடி
வாழ்ந்த
தனிப்பெரு அழகே! எம் இளையோர் மனமாற்றம் பெறவே வாழ்ந்து காட்டிய இளம் புனிதரே!
விண்ணக
நெடுஞ்சாலையில் தங்குதடையின்றிப் பயணித்த புனிதரே! உம் எண்ணம்போல் யாம் வாழ துணையாகிடுவீரே
புனித கார்லோ
அக்குதிஸ்,
உம்
பொன்மொழிபோல் யாம் துலங்க மன்றாடுவீரே....!