உலகப் பார்வையில் பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் பணக்காரர்கள்தான். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, சொகுசுக்கார், ஆடம்பர உடை, ஆபரணங்கள் எல்லாம் அவர்களைப் பணக்காரர்கள் என்றுதான் எல்லாருக்கும் காட்டியது. தெளிந்த குட்டையின் ஆழத்தில் சகதியும் நெகிழியுமாகக் காணப்படுவதுபோல, இந்தப் பணக்கார அடையாளத்தின் ஆழத்தில் வறுமையும் வெறுமையும் மிகுந்து கிடந்தது யாருக்கும் தெரியாது.
அடுத்தவேளை
உணவிற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய சூழல். திடீரெனப் பறிபோன ஐ.டி. வேலை,
வீட்டு வாடகைப் பாக்கி, நகைகளையும் சொகுசுக் காரையும் விற்றுவிட்ட போதிலும், கழுத்தை நெரிக்கும் இ.எம்.ஐ.
பிரச்சினைகள், வெளியே தலைகாட்ட முடியாத அவல நிலை... என்று பிரான்சிஸ்-பிறைடா குடும்பம் கோடைக்கால சுழல்காற்றில் சிக்கிச்சுழலும் சருகைப் போலானது.
வீட்டிலிருந்த
அனைத்தையும் விற்றாகி விட்டது. கொஞ்ச நாளாகவே ஆன்லைன் ‘சொமாட்டோ’
சாப்பாடுதான்.
அதற்கும் இனி வழியில்லை என்ற நிலை வரும்போது தற்கொலைதான் ஒரே வழி என்ற முடிவை எடுத்தது அந்தக் குடும்பம்.
இன்று
மாலை சாவதற்கான நல்ல நேரம். விஷம் அருந்திச் சாகத்திட்டம் ஒன்று உருவானது.
திருமணமாகி
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள் பிறைடா. சாக முடிவெடுத்த நிலையில் ஒரு புதிய உயிர்! நல்ல செய்திதான். ஆனால், ‘இரண்டு வயிற்றுக்குச் சாப்பாடு போதாதபோது, மூன்றாவது வயிறு தேவைதானா?’ என்ற கேள்வி அவளைப் பசி என்னும் ஆயுதம் கொண்டு தாக்கியது.
மதிய
வேளையாகப் போகிறது. இன்னும் படுக்கையிலிருந்து எழும்பாத தன் கணவன் பிரான்சிசின் அருகில் படுத்துக்கொண்டாள் அவள். தான் கருவுற்றிருப்பதைக் கூறமுடியாமல் முண்டியடித்து வந்த தன் கண்ணீரை அடக்கிக்கொண்டாள். யாரும் இன்னும் காலை உணவு உண்ணவில்லை. காரணம், வீட்டில் உணவு இல்லை. இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் காலியானது. யாரிடமும் தன் வறுமையைக் கூறி யாசிக்க அவர்கள் மனம் விரும்பவில்லை.
கண்களைக்
கசக்கிக்கொண்டே புரண்டு படுத்த பிரான்சிஸ் ‘இன்னைக்கு நீ ரொம்ப அழகா
இருக்க’ என்று
கூறிக்கொண்டே பிறைடாவின் நெற்றியிலே முத்தமிட்டான். இருவரும் ஒருவர் மற்றவர் அணைப்பில் படுத்திருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து பிரியாணி வாசம் அவர்களைத் தாலாட்டியது.
தங்கள்
வீட்டில் சாப்பிட ஒரு பாட்டில் விஷம் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையில், பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் தங்கள் தற்கொலை முடிவு என்னவாகப் போகிறது என்பதைத் தங்கள் பார்வையினாலேயே பேசிக்கொண்டனர்.
பிறைடா
கனத்த உள்ளத்தோடு ‘நான் பிரெக்னன்ட்டா இருக்கேன்’
என்று பிரான்சிஸின் காதிலே மெதுவாகக் கூறினாள். பிரான்சிஸ் என்ன சொல்வது என்று தெரியாமல், அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டுப் பிரியாணி வாசம் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு அன்று என்றுமில்லாத வகையில் அதிகமாகவே பசித்தது. ‘காலிங்’ பெல் சத்தம் கேட்டது. பிறைடா கதவைத் திறக்க எழுந்து சென்றாள். “புதுசா பக்கத்து வீட்டுல குடிவந்திருக்கோம். அதான் பிரியாணி கொடுத்துட்டுப் போகலாமுணு வந்தேன்” என்று நடுத்தர வயதுகொண்ட பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சில பிரியாணி பார்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அந்தப் பிரியாணி பொட்டலங்கள் அன்றைய நாளுக்கான அவர்களின் பசியை ஆற்றியது.
மாலை
தற்கொலை செய்துகொள்வதற்கான நேரம் வந்தது. ‘காலிங்’ பெல் சத்தம் மீண்டும் கேட்டது. கதவைத் திறக்க எழுந்து சென்றாள் பிறைடா. ஒவ்வோர் அலையும் ஏதாவது ஒன்றை நமக்காகவே கரைசேர்க்கிறது.
மனிதகுலம்
எவ்வளவுதான் துயரப்பட்டாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அத்துயரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. அப்படியான மனிதகுலத்தின் அதி நவீனக் கண்டுபிடிப்பை இக்காலகட்டத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’
என்கிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு வகைகளும் பயன்களும் உண்டு. பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை உரை (text), இசை
(music), காணொளி
(video), குறியீட்டு
மொழி (codes) மற்றும் பட (images) உருவாக்கத்திற்குப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative
AI) என்று அழைக்கிறோம். இத்தகைய தொழில்நுட்பப் படைப்புகளே இன்று இணையதள உலகில் குவிந்து மலிந்து கிடக்கின்றன.
‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ தன்
ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கு முன்பாகவே செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டப் பரிணாமம் நம் கண்முன்பாக உலா வருகிறது. இதனை ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ (Agentic A.I)
என்று அழைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் அனைத்து முகவர்களும் (Agents) இணைந்து
உழைக்க வேண்டியுள்ளதை நாம் அறிவோம். அதேபோல ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்நிறுவனத்தின் பணிகளைச் சரியாகச் செய்து முடிக்க உதவும் தொழில்நுட்பத்தையே ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ என்கிறோம்.
இன்று இவ்வகை தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, வியாபாரம், பொருளாதாரம், கட்டுமானம் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ செயற்கை
முகவர்களைப் (Agentic A.I) பணியமர்த்தி,
சரியான நேரத்தில் சரியான முடிவைத் தன்னிச்சையாக (autonomous) எடுத்துச் செயல்படும் ஆற்றல் கொண்டது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ. எதிர்வினை
(reactive) ஆற்றும் பண்புகொண்டது. கேட்பதைக் கொடுப்பதோடு தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. எதிர்வினை
ஆற்றாமல் (pro active) சிந்தித்துச் சரியான
முடிவை எடுக்கவல்லது. இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்படும் ஏ.ஐ. முகவர்
(Agentic Automation) குறிப்பிட்ட
அலுவலின் நோக்கத்தை ஆய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்றார் போன்ற பாணியைக் கையாண்டு நோக்கத்தைத் துல்லியமாக நிறைவேற்றித் தருகின்றது.
எடுத்துக்காட்டாக,
ஒரு மனிதர் வெளிநாட்டிற்குப் பயணம் செல்லவேண்டுமெனில், அவர் சில முகவர்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில்
அமெரிக்கா செல்லவேண்டும் என்ற கட்டளைப் பிறப்பிக்கப்பட்டவுடன், ஏ.ஐ. அந்தக்
கட்டளையைப் புரிந்துகொண்டு பிளைட் டிக்கெட் புக் செய்வதிலிருந்து மின்னஞ்சலுக்கு ஒவ்வோர் அப்டேட்டையும் அனுப்புவதுவரை எல்லா வேலைகளையும் ஏ.ஐ. முகவர்களே
பார்த்துக்கொள்கின்றனர்.
இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு, மிக நேர்த்தியாக வேலையும் செய்து முடிக்கப்படுகிறது என்கின்றனர் ஏ.ஐ. நிபுணர்கள்.
மனிதர்களின்
வேலையை ஏ.ஐ. முகவர்கள்
செய்து முடிக்கின்றார்கள் எனில், மனிதர்கள் இனி என்னதான் செய்வார்கள்?