தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் பங்கின் மண்ணின் மைந்தரான அருள்பணி. சூசை சேசு OMI அவர்கள் கனடாவின் கீவாட்டின்-லே-பாஸ் (Keewatin-Le Pas) உயர் மறைமாவட்டத்தின் பேராயராகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்
அமலமரி தியாகிகள் சபை (OMI) உறுப்பினர்
ஆவார். தற்போது எட்மண்டன் உயர் மறைமாவட்டத்தில் உள்ள திரு இருதய ஆலயத்தின்
பங்குத்தந்தையாகவும்,
அச்சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
அருள்பணி. சூசை சேசு அவர்கள் 1971-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்டம், புஷ்பவனம் பங்கில் பிறந்தவர். அவர் தனது தொடக்கக் கல்வியினை அருகிலுள்ள உலையூர் கிராமத்திலும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை, திருவரங்கம் திரு இருதய மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். பெங்களூருவில் உள்ள தர்மாரம் Vidya Kshetram கல்லூரியில் தத்துவயியலையும், ஆஷ்டாவில் உள்ள கிறிஸ்து பிரேமாலய இறையியல் நிறுவனத்தில் இறையியலையும் பயின்றவர். பின்னர் ஒட்டாவாவில் உள்ள புனித பவுல் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2000-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர், கடந்த பல ஆண்டுகளாகத் துணைப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை மற்றும் OMI சபையின் மாகாண ஆலோசனைக் குழு உறுப்பினர் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர்.
புதிய பேராயரின்
பணி
சிறக்க
‘நம்
வாழ்வு’ வாழ்த்துகிறது!