சமத்துவத்தின் சாட்சிகள் - 250 ஆண்டுகள்
மாபெரும்
கொன்சாகா சபையில் நான் ஓர் அங்கம்.
FSAG எங்கள் இருநூற்றைம்பது ஆண்டு தங்கம்!
உள்ளத்தில்
உறுதி, உயிருள்ள கொள்கைகள்,
அதனால்
நிலைக்கும் எங்கள் உன்னதப் பாதைகள்.
பிறப்பினால்
பேதமில்லை, பிரிவினைகள் இல்லை,
சமத்துவம்
ஒன்றே என்றும்
எங்களுக்கு எல்லை!
சபையின்
ஒவ்வொருவரும் சரிசமமாய் நிற்போம்,
அன்பை
மட்டுமே அளவுகோலாய்க் கொள்வோம்.
நீதி
நிலைத்திருக்கும் எங்கள் கொள்கை;
நியாயத்தின்
வழி நடப்பதே எங்கள் வாழ்க்கை!
தலைமுறை
கடந்தும் காக்கின்றோம் ஒற்றுமையை!
அதுவே
எங்கள் வாழ்வுக்கு கடவுள் தந்த முழுமை!
வரலாறு
கடந்தும் நாங்கள் வலிமையாய் நிற்போம்!
அந்த
நல்ல குணங்களால் இன்னும் சிறப்போம்!
சவால்கள்
பல கடந்து, சாயாமல் வாழ்கிறோம்!
ஏனெனில்
FSAG தந்த மதிப்பைப் போற்றுகிறோம்!
அன்பும்
அறமும் எங்கள் இரு கண்கள்!
அதுவே
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்!
கொன்சாகாவின்
நெறி எங்கள் சுவாசம்!
அதுவே
எங்கள் விசுவாசம்!
இன்னும்
பல நூற்றாண்டுகள் ஓங்கி வளரட்டும்!
எங்கள்
சமத்துவச் சபை எங்கும் ஒளிரட்டும்!
நான்
ஒரு கொன்சாகா சபையின் உறுப்பினர்
என்பதில்
பெருமிதம் கொள்கிறேன்!
வாழ்க...
கொன்சாகா! வளர்க.... கொன்சாகா!