இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்கத் தூதரான பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி அவர்களின் செயலாளராகப் பணியாற்றி வரும் அருள்தந்தை ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்களை மும்பை உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக திருத்தந்தை நியமித்துள்ளார்.
20-09-1961 அன்று பிறந்த அருள்தந்தை பெர்னாண்டஸ், 31-03-1990 அன்று மும்பை உயர் மறைமாவட்டத்தின் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
தாதர் இரட்சணிய அன்னை மற்றும் மாதுங்கா டான்போஸ்கோ பள்ளிகளில் கல்வி கற்ற இவர், 2000-ஆம் ஆண்டில் உரோமையில் அறநெறி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். மும்பை உயர் மறைமாவட்டக் குருக்கள் அவையின் செயலாளராகவும், புனித பத்தாம் பத்திநாதர் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இந்திய
ஆயர் பேரவையின் இறையியல் பணிக் குழுவின் நிர்வாகச் செயலாளர், F.I.A.M.C. உயிரி மருத்துவ நெறிமுறைகள் மையத்தின் இயக்குநர் பொறுப்புகளிலும் இருந்தார். இந்தியக் கத்தோலிக்கச் செவிலியர் குழுவின் தேசிய ஆலோசகராகவும், CBCI-இன் நீதி,
சமாதானம், மேம்பாட்டு அலுவலகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.