“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (ஏ.ஐ.ஆர்) நடவடிக்கைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராட காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது”
திரு. இராகுல்
காந்தி
(எதிர்க்கட்சித் தலைவர்)
“பீகார்
தேர்தல் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது குறித்து எதிரும் புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என மக்கள் மத்தியில்
சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் பணிகளை மேற்கொள்ள மிகக் குறுகிய காலமே இருப்பதால் இது நடைமுறை சாத்தியம் இல்லை எனத் தெரிந்தும் உள்நோக்கத்துடன் இதனை மேற்கொண்டு வருகின்றனர். பா.ச.க.
எதிர்ப்பு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் வகையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.”
தொல். திருமாவளவன்
(பாராளுமன்ற உறுப்பினர்)
“பீகார்
சட்டமன்றத் தேர்தல் எனக்கு எந்த வியப்பையும் தரவில்லை. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். விவகாரங்களைக்
கண்டித்துப் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் முறையிட்டதோடு, தி.மு.க.
கூட்டணியினர் இன்றைக்கு வீடு வீடாகச் சென்று மக்களின் வாக்குரிமையையும் உறுதிப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முதல்வரே நேரடியாக இவற்றைக் கண்காணித்தும் வருகிறார். இப்படியான கண்காணிப்பை பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.”
ஆளூர் ஷாநவாஸ்
(சட்டமன்ற உறுப்பினர்)
“வருகிற
2026-இல் முறையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடி வாக்குரிமையைப் பாதுகாக்க தி.மு.க.
நடவடிக்கை எடுக்கும்.”
என்.ஆர்.
இளங்கோ
(பாராளுமன்ற
உறுப்பினர்)