news-details
வத்திக்கான் செய்திகள்
“நாம் படைப்புகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”- திருத்தந்தை லியோ

பிரேசிலில் நடைபெற்று வரும் .நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகளாவிய தெற்கு ஆயர்கள் மற்றும் கர்தினால்களுடன் திருத்தந்தை லியோ அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “நீங்கள் விரக்தியை விட நம்பிக்கையையும் செயலையும் தேர்ந்தெடுத்து, ஒன்றாகச் செயல்படும் உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளீர்கள்எனப் பெருமிதம் கொண்டார். “முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது போதுமானதல்லஎன்றும், “நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு புதுப்பிக்கப்பட வேண்டும்என்றும் திருத்தந்தை அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.