news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (30.11.2025)

மரணம் நிலைவாழ்வின் நம்பிக்கைப் பயணம், இறைப்பணியாளர்கள் விண்மீன் என ஒளிர, பாஸ்கா நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டும்.”

நவ. 3, இறைப்பதமடைந்த இறைப்பணியாளர்கள் நிறையமைதி அடைய திருப்பலி

துன்பமும் விரக்தியும் அனுபவிப்போருக்கு இரக்கமும் ஆதரவும் அளிக்கும் சமூகத்தை உருவாக்கி, வாழ்வின் நம்பிக்கை அர்த்தத்தை மீட்டெடுப்போம்.”

நவ. 4, இம்மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல்

பாஸ்கா மறைபொருள் வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையின் அடித்தளம்; எல்லையற்ற அர்த்தத்தையும் புது வாழ்வையும் நோக்கிய அழைப்பு.”

நவ. 5, புதன் மறைக்கல்வி உரை

மதச்சார்பின்மைச் சவால்களின் மத்தியில் கிறித்தவர்கள் ஒன்றிப்பில் நற்செய்திப் பணிக்குத் திறம்பட ஈடுபடவேண்டும்.”

நவ, 6, ஐரோப்பா திரு அவையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

நற்செய்தி அறிவிப்பில் ஒன்றிப்பும், மறைப்பணிக்கான பன்னாட்டு ஒத்துழைப்பில் ஆதரவும் துணிவும் அன்பும் அவசியம்.”

நவ. 7, அனைத்துலக மதங்கள் அமைப்பு மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு

இயேசுவே உண்மையான கோவில், நம்பிக்கையாளர்களே உயிருள்ள கற்கள் என்பதை உணர்ந்து, அருளில் நிலைத்து இரக்கம் மற்றும் அமைதியின் நற்செய்தியைப் பரப்பவேண்டும்.”

நவ. 9, மூவேளை இறைவேண்டல் உரை