news-details
சிறுகதை
மருத்துவரின் தொண்டு (காவல் அன்னை - தொடர் கதை 12)

வணக்கம்! உங்க எல்லாரையும் இக்கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கின்றேன்  என்றார் இஸ்மாயில்.  எல்லாரும்வணக்கம்கூறிவிட்டு அமர்ந்தார்கள்.

நம்ம மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று நான் நினைக்கின்றேன்என்றார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்டீபன்ராஜ்

ஆமாம் டாக்டர், நம்ம உழைப்பாலே இந்த மருத்துவமனை நல்ல பேர் பெற்றுள்ளது. அத்துடன் முன்பைவிட அதிக பேஷண்ட் வந்து செல்கின்றனர். இந்த ஏரியாவில் நமது ஆஸ்பிடல் பற்றி நிறைய பேர் அறிந்து இங்கே வருகிறார்கள்என்றார் இஸ்மாயில்.

அதற்குக் காரணம் எங்களோட உழைப்புதான் டாக்டர். நாங்கள் கடமை உணர்வுடன் பேஷண்டுகளைக் கவனித்து வைத்தியம் பார்ப்பதுதான் இதற்கான முக்கியக் காரணம்என்றார் டாக்டர் சகாதேவன்.

வெரிகுட்! அனைவருடைய கடமையும் பாராட்டுதற்குரியது. இங்கே இருந்தவர்களில் வயதானவர்கள் அதிகமில்லை. ஒருசிலர் மட்டுமே வயதான டாக்டர்களாக உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் இளையவர்கள்தான்என்றார் தலைமை மருத்துவர்.

நாங்கள் பெற்ற அனுபவம் நிறைய இல்லை என்றாலும், கடமையை மனிதநேயத்துடன் செய்யும் போது நமக்கு வெற்றி கிடைக்கிறது. இதுதான்  உண்மை டாக்டர்என்றார் டாக்டர் யாழினி.

இதுதான்  உண்மை டாக்டர்! உழைப்பு என்பது கடமையில் தவறாமல் இருப்பது. நமது கடமையைச் சரியாக நிறைவேற்றுவதால்தானே தொழில் சிறப்படைகின்றதுஎன்றார் டாக்டர் மதுசூதனன்.

இதை ஏன் தொழில் என்று சொல்கிறீர்கள்? இது ஒரு தொண்டுதானே? நமது மக்களுக்கு அவர்கள் உயிர் வாழ உறுதுணைபுரிகின்றோம். இதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்என்றார் தலைமை மருத்துவர்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இப்பொழுது இந்தக் கூட்டத்தின் காரணத்தை நான் சொல்லி விடுகின்றேன். நமது மருத்துவமனைக்கு முன்பாக நிறைய இடம் உள்ளது. கார் பார்க்கிங்கிற்குப் போக மீதியுள்ள இடத்தில மேலும் ஒரு நான்கு மாடி கட்டடம் கட்டலாம் என்று முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் இஸ்மாயில்.

அப்படியானால் இந்த மருத்துவமனை மிகவும் நெருக்கடியாக அமைந்துவிடுமே?” என்றார் டாக்டர் மதிவதனி.

வேறு வழி இல்லையே டாக்டர் மதிவதனி. இப்ப பேஷண்ட் நிறைய வர்றாங்க. பெட் ரொம்பவும் அதிகமாய் தேவைப்படுது. டாக்டர்களுக்கும் போதுமான அறை இப்பொழுது இல்லை. இந்தத் தேவையை முன்னிட்டுதான் ஆஸ்பத்திரியில் புதிய பில்டிங் கட்ட முடிவெடுத்துள்ளோம்என்றார் டாக்டர் பாத்திமா.

ஆஸ்பத்திரியின் நிர்வாகிகள் நீங்கள்தான். டாக்டர்கள் பேஷண்டுகள் தேவையறிந்து செய்வதில் தவறில்லைஎன்றார் டாக்டர் சேவியர்.

தேவைக்காக நெருக்கடியில் கஷ்டப்பட முடியுமா?” என்றார் டாக்டர் சகாதேவன்.

சகாதேவன், போகப்போகத் தேவைகள் கூடும் போது அதற்கேற்ப நாம் செய்துதான் ஆகவேண்டும். இந்த ஆஸ்பத்திரி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. நமது மருத்துவப்பணியைத் தேடிவரும் பேஷண்டுகளுக்கான தேவையை நாம் நிறைவேற்றுவோம். அதுதான் சிறந்த சேவையாய் இருக்கும்என்றார் இஸ்மாயில்.

இத்துடன் கூட்டம் முடிந்தது. தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிஎன்றார் மருத்துவமனை சூப்பிரண்ட்.

(தொடரும்)