இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவரும், திருச்சூர் பேராயருமான மேதகு ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள், அண்மையில் வத்திக்கானில் நடைபெற்ற பொதுவான சந்திப்பின்போது திருத்தந்தையை இந்தியாவிற்கு வருகை தருமாறு ஓர் அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
இந்தச்
சந்திப்பின்போது பேராயர், இந்தியத் திரு அவையின் தற்போதைய நிலை, அதன் பணி, சவால்கள்
மற்றும் பங்களிப்புகளை விளக்கும் ஒரு விரிவான அறிக்கையையும், SWOT பகுப்பாய்வையும்
திருத்தந்தையிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், “திருத்தந்தையின் இந்திய வருகை குறித்து
நான் இந்திய அரசுடனும் ஆலோசிப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து
இந்தச் சந்திப்புக் குறித்து பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் குறிப்பிடுகையில், திருத்தந்தை
லியோ இவ்வழைப்பை அன்புடன் ஏற்றுக்கொண்டு, இந்தியத் திரு அவைக்கும் மக்களுக்கும் தனது
அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்கியதாகப் பகிர்ந்துகொண்டார்.