1. மரியா ‘புனிதை’ என்று அழைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் கருவில் உருவானதிலிருந்தே (உருவான முதல் நொடியிலிருந்து) பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தார் என்ற திடமான நம்பிக்கையானது பல நூற்றாண்டுகளாக, திருவழிபாடு மற்றும் இறையியலில் படிப்படியாக ஒரு தளத்தை ஏற்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த வளர்ச்சியானது சிறப்புமிக்க அமல உற்பவத்தின் கோட்பாட்டு வரையறைக்கான வேண்டுகோளுக்கு இட்டுச்சென்றது.
கிட்டத்தட்ட
இந்த நூற்றாண்டின் மத்தியில், இந்த விண்ணப்பத்தை ஏற்பதென்ற நோக்கத்தோடு, இறையியலாளர்களைக் கலந்தாலோசித்த பிறகு ஒரு ‘திருச்சங்கம்’ கூட்டப்படுவதைப்
போன்று, திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அத்தகைய கோட்பாட்டிற்கான சாத்தியம் மற்றும் சந்தர்ப்பம் பற்றி ஆயர்களிடம் கேள்வி எழுப்பினார். அதன் முடிவானது குறிப்பிடும்படியாக இருந்தது. 604 ஆயர்களில் பெரும்பான்மையானவர்கள் அக்கேள்விக்கு நேர்மறையான பதிலைத் தந்தார்கள். அந்தக்
கோட்பாட்டு வரையறையில் திரு அவையின் நம்பிக்கை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற அவருக்கு முந்தைய திருத்தந்தையின் அக்கறையை வலியுறுத்தி, அத்தகையதொரு பரந்துபட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு, கவனத்தோடு
ஆவணத் தயாரிப்பைத் தொடங்கினார்.
பேறுபெற்ற கன்னி
பாவத்தின்
ஒவ்வொரு
கறையிலிருந்தும்
விலக்கப்பட்டிருக்கிறார்
இந்த
வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டைத் தீர்மானிப்பதற்கென ஒன்பதாம் பத்திநாதரால் அமைக்கப்பட்ட இறையியலாளர்களுடைய சிறப்புக் குழு திரு அவையின் வழக்கத்திற்கான அடிப்படை பங்கை வகுத்தது. திரு அவையின் வாழ்வு அனுபவங்களிலிருந்தும், கிறித்தவ மக்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டிலிருந்தும் எடுக்கப்பட்ட சொல்லாடல்களை விரும்பிய இந்த முறையானது, முறையான வரையறைகளுக்கான கோட்பாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது.
இறுதியாக,
1854-இல் Ineffabilis Deus’ என்ற மடல் வழியாகத் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் அவர்கள், ‘அமல உற்பவி’ என்கிற மரியன்னை கோட்பாட்டை இவ்வாறு கூறி பிரகடனம் செய்தார்: “கன்னி மரியா அவர் கருவில் உருவான நாளிலிருந்தே கடவுளின் தனிப்பட்ட மற்றும் சிறப்பான அருளினால், இயேசு கிறிஸ்துவினுடைய சிறப்புத் தகுதியின் அடிப்படையில், முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக, இது உறுதியாகவும் தொடர்ந்து, கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்ட அனைவராலும் நம்பப்பட நாங்கள் அறிவித்து, பறைசாற்றிப் பிரகடனம் செய்கின்றோம்” (DS 2803).
2. ‘அமல உற்பவி’ என்ற
மரியன்னை கோட்பாட்டின் அறிவிப்பானது, நம்பிக்கையின் மிக முக்கியமானதொரு குறிப்பை (essential
datum of faith) வெளிப்படுத்துகிறது.
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர் கி.பி. 1661-ஆம்
ஆண்டு எழுதிய ‘Sollicitudo’ என்கிற
தனது திருமடலில் மரியாவின் ஆன்மாவானது, ‘அதன் படைப்பு மற்றும் உடலினுள் உட்செலுத்தப்படுதலில்’ பாதுகாக்கப்பட்டதைப்
பற்றிக் கூறுகின்றார் (DS 2017). இருப்பினும்,
ஒன்பதாம் பத்திநாதரின் வரையறை, எவ்வாறு ஆன்மாவானது உடலினுள் உட்செலுத்தப்படுகிறது மற்றும் மரியாவுக்கு அது
எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பது பற்றி விளக்கி, கருவில் உருவானது முதல் அவர் எவ்வாறு முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார் என்கிற உண்மையை அனைத்து விளக்கங்களிலும் விவரித்துக் கூறுகின்றார்.
‘முதல் பாவத்தின் ஒவ்வொரு கறையிலிருந்தும்’ விடுதலை
என்பது எல்லாப் பாவங்களிலிருந்தும் முழு விடுதலை அடைந்ததன் ஒரு நேர்மறை விளைவு மற்றும் மரியாவின் நிறைவான புனிதத்துவத்தை அறிவிப்பதாகக் கருதப்படுகின்ற இந்தக் கோட்பாட்டு வரையறைக்கான அடிப்படைப் பங்களிப்பைச் செய்கின்ற ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகின்றது. உண்மையில்,
மேற்கத்திய பாரம்பரியத்தில் எழுந்த முதல் பாவம் பற்றிய தொடக்ககால சர்ச்சைகளின் விளைவான, மரியாவிற்கான சிறப்புரிமையின் எதிர்மறை வடிவமைப்பானது, கிழக்கத்திய பாரம்பரியத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்தப்பட்ட மரியாவினுடைய புனிதத்துவத்தின்
நேர்மறை கருத்துகளினால் எப்பொழுதுமே ஈடு செய்யப்பட வேண்டும்.
ஒன்பதாம்
பத்திநாதரின் வரையறையானது, முதல் பாவத்திலிருந்தான விடுதலையை மட்டுமே குறிப்பிடுகின்றது; பால்வகைச் சேர்க்கையிலிருந்தான விடுதலையைச் (freedom
from concupi
-scence) சேர்க்கவில்லை.
எனினும், மரியாவினுடைய முதல்
பாவத்தின் ஒவ்வொரு கறையிலுமிருந்தான முழு பாதுகாப்பென்பது, திரிதெந்து திருச்சங்கத்தின்படி (Council of Trent), பாவத்திலிருந்து
வந்து பாவத்தின்மீது நாட்டம் கொள்ளச் செய்கின்ற ஒழுங்குபடுத்தப்படாத மனோபாவமான, பால்வகைச் சேர்க்கையிலிருந்தான அவருடைய விடுதலையின் விளைவையும் (as a consequence her freedom from concupiscence) கொண்டிருக்கின்றது (DS 1515).
3. ‘எல்லாம் வல்ல
கடவுளின் தனிப்பட்ட அருள் மற்றும் சிறப்புச் சலுகையினால்’ வழங்கப்பட்ட
இந்த முதல் பாவத்திலிருந்தான பாதுகாப்பு என்பது, முற்றிலும் இறை ஆதரவினால் அவருடைய பிறப்பின் முதலே (கருவாக உருவான முதல் நொடியிலிருந்து) மரியா பெற்றுக்கொண்ட பேறுபலனாகும்.
இந்தக்
கோட்பாட்டு வரையறையானது, மரியாவிற்கான
தனிப்பட்ட சிறப்புச் சலுகை தனித்தன்மையான ஒன்று எனக் கூறவில்லை. ஆனால், அதை இயல்பாகவே உணரச் செய்கின்றது. இருப்பினும், இந்தத் தனித்தன்மையின் உறுதி பற்றி 1953-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் தனது ‘Fulgens corona’
என்ற சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் திருத்தந்தை அவர்கள், “மற்ற எந்த நபருக்கும் எப்பொழுதும் வழங்கப்படாத தனிச்சிறப்பு மிக்க சிறப்புச் சலுகை” என்று கூறுகின்றார் (AAS 45 (1953),
580). இவ்வாறு, இது எந்தவித அடிப்படையுமில்லாமல் சிலரால் ஆதரிக்கப்பட்ட, புனித யோசேப்புவுக்கும் இந்தச் சிறப்புச் சலுகையை உடைமையாக்குவதைத் தவிர்த்தது. கன்னி மரியா அமல உற்பவியாகக் கருத்தரித்தலின் தனிப்பட்ட அருளை மனுக்குலத்தின் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் சிறப்புத் தகுதியின் நிமித்தம்
பெற்றுக்கொண்டார், அதாவது, அனைத்துலக
மீட்புச் செயலின் பொருட்டுப் பெற்றுக்கொண்டார்.
கோட்பாட்டு
வரையறையின் ஏடானது, மரியா மீட்கப்பட்டார் என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்யவில்லை. ஆனால், ‘Ineffabils Deus’ என்கிற
அதே திருமடல் மற்றோர் இடத்தில், “மிகவும் மேன்மையான வகையில் மரியா மீட்கப்பட்டார்” என்று
கூறுகிறது. இது வழக்கத்திற்கு மாறானதோர் உண்மையாக இருக்கிறது. “கிறிஸ்து அவருடைய தாயின் மீட்பராக இருக்கிறார்; அவருடைய வாழ்வின் தொடக்கம் முதலே அவரில் ‘மிகச் சரியான
வகையில்’ அவரின்
மீட்புச் செயலை நிறைவேற்றுகின்றார்” (Fulgens corona, ASS 45 (1953], 581). இதையே, “மரியாவில் மீட்பின்
மிக உன்னதமான கனியை” திரு அவை வியந்து
பாராட்டுகின்றது மற்றும் மேன்மைப்படுத்துகின்றது என்று இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானது அறிவிக்கின்றது (திருவழிபாடு, எண்.103). இந்தச்
சிறப்பு வரையறை இறை மக்களின் நம்பிக்கைக்கு உதவுகிறது.
4. ஆர்ப்பரிப்போடு
அறிவிக்கப்பட்ட இந்தக் கோட்பாடானது ‘கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதொரு கோட்பாடு’
என்று தெளிவாகக் குறிக்கப்பட்டது. திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “இது உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் எல்லா நம்பிக்கையாளர்களாலும் நம்பப்பட வேண்டும்”
என்று கூறு கின்றார். ஆகவே, யாரெல்லாம் இதைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவில்லையோ அல்லது இதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளாரோ அவர், ‘நம்பிக்கையில் பேரழிவைச் சந்திக்கின்றார்’ அல்லது
‘கத்தோலிக்க ஒருமைப்பாட்டிலிருந்து தன்னை விலக்கிக்கொள்கின்றார்’ என்றும்
கூறுகின்றார்.
“அமல உற்பவி’ என்கிற இந்த மரியன்னை கோட்பாட்டு உண்மையை அறிவிப்பதில், அகில உலகத் திரு அவைக்குமான மேய்ப்பர் என்கிற வகையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு
முதல் வத்திக்கான் சங்கத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட தவறா நிலையுடைய போதனையின் அதிகாரத்தைப் (power
of infallible teaching) பயன்படுத்துவதில் எனக்கு முந்தைய திருத்தந்தை மிகவும் கவனமாக இருந்தார். இவ்வாறாக, அவர் தனது தவறா
நிலையுடைய போதனையைக் கடவுளுடைய மக்களின் நம்பிக்கைக்கு உதவுகின்ற வகையில் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தார். மேலும், அவர் இதை மரியாவைச் சிறப்பு செய்வதற்காகப் பயன்படுத்தினார்” என்று திருத்தந்தை
ஒன்பதாம் பத்திநாதர் குறிப்பிட்டார்.
மூலம்:
John Paul II, Immaculate conception defined by Pius IX, in
kL\'Osservatore Romano, Weekly Edition in English, 19 June 1996,
p.11.