இறையாட்சியின் அரும் சாட்சியாக வாழ்ந்த
இலட்சியச்
செம்மல் மைக்கேல் அன்சால்தோ
இயேசு
சபையின் இணையில்லாச் சொத்து!
ஏனென்றால்
-
இயேசு
சபையானது பல்வேறு காரணங்களினால் இரத்து செய்யப்பட்ட
காலச்
சூழலமைவானது
இடறல்
கொண்டதாக இருக்கும்போதே,
அலோசியஸ்
கொன்சாகாவின்
இனிய
நாமத்துடன் புதியதொரு
துறவற
சபையினை இடம்பெறச் செய்தார்,
திரு
அவையின் வரலாற்றிலே!
அன்சால்தோ
அடிகளாரின்
அடிச்சுவடுகளைப்
பின்பற்றி
அசிசியாரின்
அருள்சகோதரிகளாக
அலோசியஸ்
கொன்சாகா சபையினர்
அரும்பெரும்
பணிகள் பல
ஆற்றி
வருகின்றார்கள் 250 ஆண்டுகளாக!
அவர்களின்
எதிர்காலமும் அதற்கான
அவர்களின்
எதிர்நோக்குகளும்,
அவர்களின்
எதிர்பார்ப்புகளையும்
விஞ்சி அமைந்திட,
ஆவியின்
ஆற்றலால், இறை இயேசு தாமே
ஆசிர்
வழங்கிட அரவணைத்திட வாழ்த்திடும்...