news-details
வத்திக்கான் செய்திகள்
“கத்தோலிக்கக் கல்வி என்பது நம்பிக்கையின் அறிகுறிகளை வழங்கவேண்டும்”- திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்காவில் தரமான கத்தோலிக்கக் கல்வியையும், உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் உறுப்பினர்களைச்  சந்தித்த திருத்தந்தை, “ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள், அங்குள்ள மாணவர்கள் உதவிக்காக  எழுப்பும் அமைதியான கூக்குரல்களுக்குப் பதிலளிக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்கக் கல்வி மற்றும் ஆப்பிரிக்கச் சூழலில் நம்பிக்கையின் அறிகுறிகளை ஊக்குவித்தல்என்ற கருப்பொருளில் கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநாடு குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆப்பிரிக்க அடையாளத்தால் நிரப்பப்பட்ட தரமான கல்வியை வளர்ப்பதன் மூலம் அந்நாட்டு இளைஞர்களை உருவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும், அனைத்து வயதினரிலும் வளரும் பொதுவான உள் பலவீனத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கவலையுற்ற திருத்தந்தை, “உதவிக்கான இந்த அமைதியின் கூக்குரல்களுக்கு நாம், நம் கண்களை மூடிக்கொள்ளக் கூடாதுஎன்று குறிப்பிட்டார்.