இன்றைய சூழலில், பொதுவாக ஊடகத்துறையின் செயல்பாடுகள் வியப்பூட்டுகின்றன. நமது கிறித்தவ அச்சு ஊடகவியலாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கண்டு பெரிதும் பூரிப்படைகிறேன். அவர்களின் கூர்மையான எழுத்துகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் உண்மைக்கான அச்சமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை போற்றத்தக்கவை. உண்மை பெரும்பாலும் மறைக்கப்படும்- மறுக்கப்படும் காலத்தில், அவர்களின் சிறப்புக்குரிய பணிகள் நமது முன்னேற்றத்திற்கான பாதையை ஒளிரச் செய்கின்றன.
ஒரு
பத்திரிகையாளரின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று குறிப்பிடும் நமது தேசப் பிதா மகாத்மா காந்தி, “ஒரு பத்திரிகையாளரின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் நாட்டின் அன்றாடச் சூழல்களைப் படித்து, உறுதியான மனத்துடன், திட்டவட்டமான
அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்கக்கூடியதாக இருக்கவேண்டும்” என்று
கூறினார். இக்காலத்தில் அதன் கூடுதல் பொறுப்பு என்பது, உண்மையின் குரலை உருவகப்படுத்தவும், குரலற்றவர்களின் குரல்களைப் பதிவுசெய்யவும், தளராத நேர்மை மற்றும் துணிவுடன் மனசாட்சியை வெளிப்படுத்தவும் அழைக்கப்பட்ட இன்றைய கிறித்தவப் பத்திரிகையாளர்களில் ஆழமாக எதிரொலிக்கிறது. அவர்கள் அரசியல் அழுத்தங்களின் கொந்தளிப்பான நீரோட்டத்தில் பயணிக்க வேண்டும்; தவறான புனைக்கதைகளை எதிர்க்க வேண்டும்; எதார்த்தத்தைச் சிதைக்க முயலும் மறைமுக நிகழ்வுகளுக்கும் செயல்திட்டங்களுக்கும் எதிராக உறுதியுடன் நிற்கவேண்டும்.
இந்திய
அச்சு ஊடகத்துறை, எதிர்காலத்தின் முன்னோட்டமாக அதன் புனிதமான பணிக்கும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அதிகரித்துவரும் அச்சுறுத்துதலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் தன் இருத்தலை எண்பித்துக்கொண்டிருக்கிறது.
நீதி மற்றும் உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம், சக்திவாய்ந்த அரசியல் தாக்கங்களின் அழுத்தம் மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டின் அரசியலமைப்பு உத்தரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றத்தை இது அன்றாடம் எதிர்கொள்கிறது. அச்சு ஊடகம் எதிர்கொள்ளும் சவால்கள் இதற்குமுன் ஒருபோதும் இவ்வளவு சிக்கலானதாகவும் பன்முனைத் தாக்குதல் கொண்டதாகவும் இருந்ததில்லை.
வளர்ந்து வரும்
தளங்கள்
தொழில்நுட்பக்
கண்டு பிடிப்புகளின் இடைவிடாத வேகத்தால் உந்தப்பட்டு, ஊடகத்துறை பெரும் அதிர்வுக்குரிய மாற்றத்திற்கு இன்று உட்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் செய்தி பரவலின் அடிநாதமாக, மூலைக் கல்லாக விளங்கிய அச்சு ஊடகம், இன்று தொழில்நுட்பச் சமூக ஊடகங்களின் உடனடித்தன்மையுடன் போராடுகிறது. டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை ஒரு காலத்தில் அச்சு ஊடகத்தின் தொட்டுணரக்கூடிய பக்கங்களுக்கு விருப்பம் கொண்டிருந்த வாசகர்களின் எண்ணங்களை இன்று ஆழமாக மறுவடிவமைத்துள்ளன. இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் டிஜிட்டல் ஊடக நுகர்வில் பெரும் அசாதாரண எழுச்சி ஏற்பட்டுள்ளது; குறிப்பாக, இளையோர் இனி காலைச் செய்தித்தாளுக்காகக் காத்திருக்காமல், ‘ஆன்லைன்’ செய்திகளின் வேகமான நீரோட்டத்தில் பயணிக்கிறார்கள். இந்தகைய எண்ணிமத் தொழில்நுட்ப உலகில் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியுமா?
என்னும் அடிப்படைக் கேள்வியும் இங்கு எழுகிறது.
கிறித்தவப்
பத்திரிகையாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொண்டு, கால நீரோட்டத்துடன் தங்களைத் தகவமைத்துக்கொள்வதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும். திரு அவையின் நீடித்த பலம், அதன் சமூக ஒற்றுமையின் மரபில் உள்ளது. அதாவது, ஞானத்தைப் பகிர்ந்துகொள்வதிலும், ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதிலும் கற்றுக்கொள்வதிலும் உறுதி கொண்டிருக்கிறது. மேலும், நாம் இயேசுவின் சீடர்களாக, ‘உலகின் ஒளியாக’
(மத் 5:14) வாழ அழைக்கப்படுகிறோம். “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் இறைவார்த்தையால் வழிநடத்தப்பட்டு, இந்தக் குழப்பமான காலங்களில் தெளிவுடனும் உன்னத நோக்கத்துடனும் பயணிக்க நாம் துணிவுடன் இருக்க வேண்டும்.
வளர்ந்து வரும்
எதார்த்தங்கள்
இந்தியாவில்
பத்திரிகையின் நெறிமுறைகள் முன்பில்லாத வேகத்தில் தற்போது மாறி வருகின்றன; கிறித்தவப் பத்திரிகையாளர்களை வலிமையான சவால்களுடன் அவை எதிர்கொள்கின்றன.
கேள்விக்குள்ளாகும்
பத்திரிகைச்
சுதந்திரம்:
நுட்பமான அழுத்தங்கள், வளர்ந்து வரும் ஊடகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளால் பத்திரிகைச் சுதந்திரத்தின் புனிதத் தன்மை பெருமளவில் பாதிக்கப்படுகிறது. ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறைவாசத்தை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்கள், அவர்கள்மீது தொடுக்கப்படும் வன்முறைகள் உண்மைக்குச்
சான்று பகர்பவர்களிடையே அச்சத்தையும் நிலையற்றத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன.
பரபரப்பின் எழுச்சி:
பரபரப்பான செய்தி, உண்மையற்றத் தரவுகளை (Fake News) வெளியிடுதல்
மற்றும் புனையப்பட்ட கதைகள், உண்மையான அச்சுப் பத்திரிகையின் அளவிடப்பட்ட பரவலை விட, ஆபத்தான வேகத்தில் பரவுகின்றன. இந்தச் சிதைவு உண்மையான செய்தி வெளியிடுதலின் நம்பகத் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வாசகர் எண்ணிக்கையில்
மாற்றம்:
எண்ணிமத் தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் AI-ஆல்
இயக்கப்படும் செய்திகளின் ஆதிக்கம், விளிம்புநிலை மற்றும் படிப்பறிவற்றவர்களுக்குக் கூட அணுகக்கூடியது; இது அச்சு ஊடக வாசகர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது; இது பாரம்பரிய ஊடகங்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது.
சிறுபான்மையினரின்
அடையாளங்கள்:
கிறித்தவச் சமூகங்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் அடிக்கடி சிதைந்த சித்தரிப்புகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கதைகளுக்கு ஆளாகின்றனர்; இது தவறான எண்ணத்தையும் உண்மைக்குப் புறம்பான
தகவல்களையும் தருகிறது.
கிறித்தவ வெளியீடுகளில் நிதி
நெருக்கடி:
சிறிய அளவிலான கிறித்தவ வெளியீடுகள், குறைந்துவரும் விளம்பர வருவாயுடன் போராடுகின்றன. மேலும், அவை
வரையறுக்கப்பட்ட ஊழியர்கள், காலங்கடந்த பழைய தொழில்நுட்பம்
மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்புகளுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
வெளிப்புற அழுத்தங்கள்:
கிறித்தவப் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் அரசியல்-சமூக அழுத்தங்களால் தங்கள் நம்பிக்கை, சிறுபான்மை உரிமைகள் அல்லது சமூக நீதி பற்றிய செய்திகளை மென்மையாக்குவதற்கான வெளிப்படையான சவால்களையும் ஆளும் அரசியல் கட்சிகளால்-பெரும்பான்மையினரால் எதிர்கொள்கின்றனர்; இது நேர்மையுடன் அறிக்கையிடுவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டைச் சோதிக்கிறது.
இத்தகைய கடினமான
எதிர்மறைச் சூழலில், கிறித்தவப் பத்திரிகையாளர்கள் அசைக்க முடியாத உண்மை, அச்சமற்ற நம்பிக்கை மற்றும் நீதிக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அறிக்கையிடுவதற்கான புனிதமான கொள்கைகளைக் கொண்டுள்ளனர்.
மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியது போல, தவறான முன்னெண்ணம், வெறுப்பு ஆகியவற்றின் கட்டுகளிலிருந்து தகவல்தொடர்புகளை நாம் இன்று விடுவிக்கவேண்டும்; பிளவுபடுத்தும் சொல்லாட்சிகளைப் புறந்தள்ளுவதன் மூலம் இரக்கத்தில் வேரூன்றிய உரையாடலை நாம் வளர்க்க முடியும்; எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் உலகில் உண்மையின் கலங்கரை விளக்கங்களாகவும் நல்லிணக்கத்தின் முகவர்களாகவும் இருக்கவேண்டும்.
அச்சுப் பத்திரிகையின்
நீடித்த
பலங்கள்
எண்ணிமத்
தொழில்நுட்ப ஊடகங்களின் அதி மிக வளர்ச்சியால் ஆதிக்கம்
செலுத்தும் காலகட்டத்தில், அச்சு ஊடகம் அதன் தனித்துவமான, ஈடு செய்ய முடியாத தாக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. கவனமாக எழுதப் பட்ட, திருத்தப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரையின் நம்பகத்தன்மை, ஒரு சமூக ஊடக இடுகை / ‘டுவீட்’களின் விரைவான தன்னிச்சையான தன்மையைவிட மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை உலகம் அறிந்துகொள்ளவேண்டும். உறுதியான பதிவுகளாகப் பாதுகாக்கப்படும் செய் தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், வரலாற்றின் ஒரு பகுதியாக மாறி, எதிர்காலச் சந்ததியினருக்கு இன்றைய காலத்தின் உண்மையின் தரவுகளைப் பதிவு செய்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.
எனவே,
அச்சுப் பத்திரிகையின் மரபை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்போம். எண்ணிம உலகத்தில் சவால்கள் இருந்தபோதிலும், இந்த முக்கியமான ஊடகத்தைப் பாதுகாத்து, அதைப் பின்தொடர்பவர்களுக்கு நேர்மையுடன் என்றும் வழங்க நாம் முற்படுவோம்.
மொழியாக்கம்: அருள்முனைவர் செ. இராஜசேகரன்