என் பெயர் ஜோதிமணி. நான் மதுரை மாவட்டம் சூரமங்கலம் இல்லத்தில் வளர்க்கப்பட்டேன். தற்போது பாத்திமா கல்லூரி, மதுரையில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
நான்
இந்தச் சபையின் வளர்ப்புப் பிள்ளைகள் சார்பாக நன்றி தெரிவிக்கவும், வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் இங்கு வந்திருக்கிறேன். இந்த அருமையான வாய்ப்பிற்காக எனது இதயப்பூர்வ நன்றி பல.
250-ஆம் ஆண்டுகளில்
எமது கொன்சாகா சபை என்ன செய்தது? என்ன செய்து வருகின்றது? என்பதனை ஆவணங்களிலும் சாட்சிகளிலும் தேட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், 250 ஆண்டுகளுக்கு முன்பே எமது சபை நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்கள் கனவு கண்ட ‘இறையாட்சி இலக்கு மக்களின் தோழமையில் மலரட்டும்’
என்ற நோக்கத்தை எம் சபை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான பணி - வளர்ப்புப் பிள்ளைகளை வளர்ப்பது.
நான்
அவர்களால் வளர்க்கப்பட்ட வளர்ப்புப் பிள்ளை. எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்கப்படாத அரிய வரங்கள். அந்த அடிப்படையில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று கருதுகிறேன்.
கொன்சாகா
சபையில் பல பள்ளிகள் இருந்தாலும்,
‘அனுபவம் பல பெற வேண்டும்’ என்ற
நோக்கில், சகோதரிகள் என்னைப் பிற சபைகள் நடத்தும் பள்ளிகளிலும், அதிகக் கட்டணமுள்ள கல்வி நிறுனங்களிலும் படிக்க வைத்தார்கள். இது எனக்கு வாழ்க்கையின் பல பரிமாணங்களில் விசாலமான
பார்வையையும் புதிய அனுபவங்களையும் அளித்தன.
நான்
கொன்சாகா சபையில் வளர்க்கப்பட்டவள் என்பதற்காகப் பெருமை பேசவில்லை. ஆனால், அன்பும் வாய்ப்பும் நம்பிக்கையும் அளித்த சபையைப் பற்றி உண்மையுடன் சாட்சி அளிக்கிறேன். பல துறவற சபைகள்
அனாதைகள், விதவையர், கைவிடப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுகின்றன. ஆனால், கொன்சாகா சபை இந்தப் பணியை Heart of activity
அதன் இதயப் பணியாகவே செய்து வருகிறது.
கொன்சாகா
சபை இந்த 250 ஆண்டுகளில் தனது ‘தனிவரத்தை’
வாழ வைத்திருக்கிறதா எனில், ஆமாம் - நான், என்னைப் போன்ற வளர்ப்பு மகள்கள் அந்த வரத்தின் உயிருள்ள கனிகள். எங்களைக் குழந்தைப் பருவம் முதல் வளர்த்த எமது அருள்சகோதரிகள், தாயாகவும் அக்காவாகவும் தோழியாகவும் ஆசிரியையாகவும் பல நிலைகளில் எங்கள்
வாழ்வில் பங்காற்றியுள்ளனர். கல்வியிலும் அன்பிலும் அறத்திலும் ஆன்மிகத்திலும் எங்களை உருவாக்கி நெறி நிறைந்த வாழ்வை அளித்துள்ளனர்.
எங்கள்
திருமணம், குழந்தைகள், குடும்ப நிகழ்வுகள், பொருளாதார நெருக்கடிகள், நோய்கள், மன அழுத்தங்கள் எதிலும்
‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்ற
உறுதியை அளித்தவர்கள் எமது அன்னையர் - கொன்சாகா சகோதரிகள்.
எனவே,
இந்த நேரத்தில் எமது சபைத் தலைவர்களுக்கும் மாநிலத் தலைவிகளுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் மேலும் அனைத்து அருள்சகோதரிகளுக்கும் வளர்ப்பு மகள்களின் சார்பாக இதயம் கனிந்த நன்றியும் யூபிலி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன்
எம் சபையின் கனவுகளை நிறைவேற்றி, அதன் பணியை இன்னும் பல நூற்றாண்டுகள் தொடரும்
ஆற்றலை அருள்வாராக!
எங்கள்
அனைவரின் சார்பாக மீண்டும் ஒருமுறை, அன்பின் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமதி. ஜோதிமணி தானியேல், இயற்பியல்துறை பேராசிரியை, பாத்திமா கல்லூரி, மதுரை