இன்றைய இந்தப் புனித நாளில், புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவை நாம் ஆனந்தத்துடனும் நன்றியுடனும் கொண்டாடுகிறோம். இது வெறும் ஒரு விழா அல்ல; இது நம் சபையின் இறையருளின் சாட்சி. நம் வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்களின் வரலாறு.
இந்தச்
சபை எனக்கு ஒரு தாயாக இருந்தது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தி வளர்த்தது. இறைவனுக்காக அர்ப்பணிக்கச் செய்தது இந்தச் சபையே. இங்குப் பெற்ற செபவாழ்க்கை, தியானத்தின் ஒழுக்கம், பணிவான சேவை மனப்பாங்கு இவை அனைத்தும் என்னை இன்று எளிமையான அருள்சகோதரியாக உருவாக்கியுள்ளது.
என்
வாழ்வின் பாதையில் “கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்” (லூக்
1:49) என்ற வசனத்தை நான் தினமும் அனுபவிக்கிறேன். இந்தச் சபை அளித்த ஊக்கம், அன்பு, ஒத்துழைப்பு இவையனைத்தும் என்னைச் செபம், தியானம், தவம் நிறைந்த வாழ்க்கைக்குள் அழைத்துச் சென்றது.
இது
என் வாழ்வைப் பற்றி நான் கூறும் சாட்சிய வாழ்வு அல்ல; எம் முன்னோர், மூத்த அன்னையர் கூட இறைப்பராமரிப்பை உணர்ந்து
நன்றிநிறை நெஞ்சுடன் வாழ்ந்துள்ளனர். இஸ்ரயேல் மக்களைப் பார்வோன் மன்னனிடமிருந்து காப்பற்றியது போலவும், 40 ஆண்டுகாலம் ஒன்றுமில்லாமையில் கூட உணவும் நீரும் தந்து வழிநடத்தியது போலவும் எம் சபையை இறைக்கரம் வழிநடத்திய பாங்கையும் நன்றிநிறை உள்ளத்துடன் பகிர்ந்துள்ளனர். இப்படி இறைப்பராமரிப்பில் வளர்ந்துவரும் நான் இன்றைய நிலையில் நற்செய்திப்பணி, மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
மருத்துவப்பணி
என்பது உடல் குணமளிப்பதற்கானதல்ல; மாறாக, அது இறைவனின் கருணையை மனிதனின் கண்ணீரில் பிரதிபலிப்பது. ஒவ்வொரு நோயாளியின் முகத்திலும் நான் கிறிஸ்துவின் முகத்தைக் காண்கிறேன். அந்தக் காயங்களின் வழியே இறைவனின் அருளின் ஒளி மின்னுகிறது. அது எனக்கு ஒரு தியானம், ஒரு நற்செய்திப் பணியாக மாறியுள்ளது.
புனித
அலோசியஸ் கொன்சாகா வாழ்வு போலவே ‘இறைவனுக்காக உயிரை அர்ப்பணிக்கிறவன் புனிதம் அன்பில் வெளிப்படும்.’ அந்த அன்பு நம்மை ஒன்றிணைக்கட்டும், புதுப்பிக்கட்டும், செபத்தில் உறுதியாக்கட்டும். 250 ஆண்டுகள்
கடந்து வந்த எம் சபை, என் வாழ்வை மட்டுமல்ல, எண்ணற்ற ஆன்மாக்களை இறைவனின் வழியில் வழிநடத்தி வந்துள்ளது. இந்த
யூபிலி விழாவில் நாம்
கூறவேண்டியது ஒன்றே...
இறைவா, நீர்
என்
வழிகாட்டி!
என் கடந்தகாலம்
உமது
கரம்!
என் எதிர்காலம்
உமது
திட்டம்!
இந்தப்
புனித யூபிலி ஆண்டில் எம் சபை மேலும் பல ஆன்மாக்களை இறையருளின்
பாதையில் அழைக்கட்டும். இறைவன் நம் அனைவரையும் ஆசிர்வதித்து நம்பிக்கை, நன்றி, அன்பு ஆகிய மூன்றிலும் நம்மை நிலைநிறுத்தட்டும்!