news-details
தமிழக செய்திகள்
நினைவுகூரப்பட்ட மறைமாவட்ட இறையடியார்களின் முன்மாதிரியான வாழ்க்கையால் தூண்டப்பட அழைப்பு!

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் நாள், யூபிலி 2025-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 9 தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவன்று ஒவ்வொரு தலத் திரு அவையும் புனிதர்களை மட்டுமன்றி, அந்தந்த மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்டு பிறந்து, உலகளாவியத் திரு அவைக்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அருளாளர்கள், இறை ஊழியர்கள், வணக்கத்திற்குரியவர்கள் அனைவரையும் நினைவுகூர கடிதம் ஒன்றின் வழியாக அழைப்பு விடுத்திருந்தார்.

திருத்தந்தையின் அழைப்பின்படி தூத்துக்குடி மறைமாவட்ட இறையடியார்கள் அகுஸ்தின் பெரைரா, அந்தோனி சூசைநாதர் ஆகியோரின் முன்மாதிரியான வாழ்வு நினைவுகூரப்பட்டு, அவர்கள் விரைவில் அருளாளர் நிலைக்கு உயர சிறப்புத் திருப்பலி, இறையடியார் அந்தோனி சூசை நாதர் கல்லறை இருக்கும் வடக்கன்குளம், புனித திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது.