news-details
வத்திக்கான் செய்திகள்
‘உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்’- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் ஒருங்கிணைந்த திரு அவை முன்னெடுப்புக் குழுக்கள் மற்றும் பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றியவர் மூவேளை இறைச்சிந்தனையின்போது, “கடவுளோடு கொண்ட உறவில் மனத்தாழ்மையையும், நேர்மையான இதயத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்என வலியுறுத்தினார். மேலும், “ஒருவரின் தகுதிகளை வெளிப்படுத்துவதன் மூலமோ, ஒருவரின் தவறுகளை மறைப்பதன் மூலமோ அல்ல; மாறாக, நாம் இருப்பதுபோல் கடவுளுக்கு முன்பாகவும், மற்றவர்கள் முன்பாகவும் நேர்மையாக இருப்பவரே மீட்கப்படுகிறார்என்று விளக்கினார்.

புனித அகுஸ்தினாரை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, நிலையற்ற பெருமையால் தனது காயங்களை மறைப்பவர் ஒரு நோயாளிக்குச் சமம் என்றும், குணமடைய தனது காயங்களைத் தாழ்மையுடன் வெளிப்படுத்துவதையே இறைவன் விரும்புகிறார் என்றும் தெரிவித்து, நம் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்றும், மனத்தாழ்மையின் இந்தப் பாதைதான், உள்மனக் குணப்படுத்துதலையும் கடவுளது அரசின் வளர்ச்சியையும் கொண்டுவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.