தமிழ் இலக்கியத்தில் ஓர் அட்சயப்பாத்திரம் உண்டு. ஐம்பெரும் காப்பியமாகிய மணிமேகலை என்னும் பௌத்தத் துறவிக்கு ஓர் அட்சயப்பாத்திரம் கிடைத்தது. அள்ளஅள்ளக் குறையாத அமுத சுரபியை அது வழங்கியது. மக்களின் வறுமையை நீக்கி வளமையைத் தந்தது. அதுபோல் சமூகத்தில் தேவை ஏற்படும்போது ஒருசிலரை, ஒருசிலவற்றை அட்சயப்பாத்திரமாக இறைவன் பயன்படுத்துகின்றார். இதற்குக் கொன்சாகா துறவறக் குழுமமே சான்று.
எரியும்
திரி தன்னைக் கரைத்து ஒளியேற்றுவதுபோல
மணக்கும்
மலர் தன் வாசனையைத் தருவது போல
மும்மாரி
மழை மண்ணைக் குளிர்விப்பது போல
கதிர்பரப்பும்
சூரியன் பூமிக்கு உயிரளிப்பது போல...
நலிந்த
சமூகத்திற்காகத் தன்னைக் கரைக்க 250 ஆண்டுகளுக்கு முன்பே அட்சயப்பாத்திரமாக ஓர் அன்சால்தோவை இறைவன் அனுப்பி வைத்தார். அவரால் ஊன்றப்பட்ட விதை இன்று பல விருட்சங்களாகி, பல நூறு
சகோதரிகள் என்னும் அட்சயப்பாத்திரங்களாகப் பெருகி, தம் உடல், பொருள், ஆவி வழியாகச் சமூகத்திற்கு மகிழ்வுடன் கொடுத்து வருகின்றனர் கொன்சாகா துறவியர்.
இந்தக்
கொன்சாகா துறவறக் குழுமத்தின் உறுப்பினராகிய சகோ. டயானா என்னும் பெயர் கொண்ட நான் திருச்சி மறைமாவட்டத்தில் முல்லைக்கொடி என்னும் கிராமத்தில் பிறந்தவள். நற்செய்திப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி என்று பல நிலைகளில் இறையாட்சிப்
பணியைச் செய்து மகிழ்ந்தேன். தற்போது முனைவர் பட்டம் பெற சபை என்னை அனுமதித்து அதனைத் தொடர எல்லா வளங்களையும் தந்து உற்சாகம் ஊட்டி வழிநடத்துகின்றது. தொடர்ந்து நானும் ஓர் அட்சயப்பாத்திரமாக, சபை வழியாகச் சமூகத்திற்கு என்னை வழங்க விரும்புகிறேன். இறைவன் தாமே என்னைத் தொடர்ந்து எடுத்துப் பயன்படுத்துவாராக!
எம்
கொன்சாகா துறவியர் செய்யும் ஆன்மிகப்பணி, சமூகப்பணியைப் பட்டியலிட்டால் ஒன்றா... இரண்டா? எண்ணற்றப்
பணிகளைத் தலைவன் இயேசுவின் அடிச்சுவட்டில் பின்பற்றி, தம்மையே தாரைவார்த்துச் சமூகத்தின் தேவையை நிறைவு செய்து வருகின்றனர்.
இவர்களின்
தொண்டுள்ளத்தால் பிஞ்சுக் குழந்தையர் முதல் இளையோர்வரை கல்வி என்னும் ஞானப்
பாலைப் பெற்று அறிவுஜீவிகளாகி உள்ளனர். ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்பதற்கேற்ப, இறைவனையே இனம்காட்டுகின்றனர். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்று முதியோர் பராமரிப்பு, படிக்க இயலாத ஏழை உள்ளங்களுக்கு நிதியுதவி, முகவரி இழந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைப் பணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளை எடுத்துப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றுதல் என்று பல கோணங்களில் - பல
பரிமாணங்களில் அன்சால்தோ விரும்பிய அன்புப் பணியை அயராது செய்து மகிழ்கின்றனர். கொன்சாகா துறவியர் ஒவ்வொருவரும் ஓர் அட்சயப்பாத்திரமாக இருந்து தொண்டாற்றி மகிழ்கின்றனர்.
இந்த
இனிய வேளையில் இன்னும் பல மைல் தூரம்
சமூகத்தில் தடம் பதிக்க இறைவன் கொன்சாகா துறவறத்தைத் தம் அருளால் நிரப்புவாராக!