புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் (SDM) இரண்டாவது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய நாள்களில் சென்னை, புனித தோமையார் மலையில் அமைந்துள்ள DMI தேசிய மையத்தில் நடைபெற்றது.
சபையின்
நிறுவுநர் நினைவில் வாழும் மதிப்புமிகு பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின்
நினைவுகளுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், பேரவைக்கான ஆன்மிகத் தயாரிப்பை அருள்பணி. ஜெரி சே.ச. வழிநடத்தினார்.
அவருடைய உரையாடலும், ஆன்மிகச் சிந்தனைகளும் சபை உறுப்பினர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலுக்குத் திறந்த மனநிலையுடன் தங்களையே அர்ப்பணிக்க உதவியாக அமைந்திருந்தன.
இப்பேரவையை
ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரும், இச்சபையின் திரு அவைசார் ஆலோசகருமான ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. அருள்ராஜ் மற்றும் மறைமாவட்ட நிதி மற்றும் சொத்துகளின் கண்காணிப்பிற்கான திருத்தூது நிர்வாகி அருள்பணி. டேவிட் குமார் OMI ஆகிய இருவரையும் நியமித்தார். இவர்களின் வழிகாட்டுதலுடன் பேரவை அமர்வுகள் சகோதரத்துவ உணர்வு, தியானம், இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழியாகச் சபையின் நோக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தின. ஆழமான இறைவேண்டல் மற்றும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி இந்தப் பேரவை சபையின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.
இரண்டாவது
பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிர்வாகம்:
• பேரருள்பணி. அந்தோனி
அடிமை
பிரான்சிஸ், SDM - சபை
தலைவர்
•
பேரருள்பணி. மரிய
இராபர்ட்
செபாஸ்டின்,
SDM - முதன்மை அருள்பணியாளர்
• அருள்பணி. ஆன்ட்ரூ
கஸ்பார்,
SDM - பொது ஆலோசகர்
• அருள்பணி. ஸ்டீபன்
குழந்தைசாமி,
SDM
- பொது ஆலோசகர்
• அருள்பணி. கிரண்குமார்
பட்டு,
SDM - பொது ஆலோசகர்
புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மேனாள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள பணியை மிகுந்த நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்தனர். சிறப்பாக நடைபெற்ற இந்தப் பொது அமர்வு, தங்கள் சபை நிறுவுநரான பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின்
அர்ப்பணிப்பையும், அவரின் எதிர்கால முன்னுரிமைகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
பேரருள்பணி. அந்தோனி
அடிமை
பிரான்சிஸ், SDM, சபை
தலைவர்,
புனித
யூஜின்
டி
மாசனெட்
துறவற
சபை