news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (07.12.2025)

செயற்கை நுண்ணறிவால் மருத்துவ நன்மைகள் இருந்தாலும், மனித மாண்பைக் காக்க பொறுப்புடன் அவற்றைப் பயன்படுத்தி, இரக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னிறுத்த வேண்டும்.”

நவ. 10, ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்மாநாடு செய்தி

திரு அவை ஆன்மிக-கல்வி மையமாக, மனிதமும் தெய்வீகமும் இணைந்த சேவையாகக் கிறிஸ்துவில் மையமாக வேண்டும்.”

நவ. 11, உரோமையின் புனித ஆன்செல்ம் கோவில் நேர்ந்தளிப்பின் 125-வது ஆண்டு நிறைவுச் சிறப்புத் திருப்பலி

சகோதரத்துவம் மற்றும் உடன்பிறந்த உறவை இயேசு, அன்பின் அடிப்படையில் உலகளாவிய மனிதநேயமாக்கினார்.”

நவ. 12, புதன் மறைக்கல்வி உரை

மறையுண்மை, கடவுளுடன் ஆழமான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் ஆன்மிகக் கொடை!”

நவ. 13, இறை ஒன்றிப்பு நெறி மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு உரை

அமைதி, நீதி, மனித மரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் கல்விச்சிறப்பைத் தொடரவேண்டும்.”

நவ. 14, பாப்பிறை இலாத்தரன் பல்கலைக்கழகத்தின் 253-வது கல்வியாண்டு துவக்க உரை

திரைப்படம் அழகு மற்றும் உண்மையை வெளிப்படுத்தி, சமூக மனிதநேயத்தை உயர்த்தும் ஆன்மிகக் கலையாக உலகச் சவால்களைப் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 15, உலகத் திரைப்படத் துறையின் நிபுணர்கள் குழுச் சந்திப்பு

வறுமை தார்மீகச் சவாலாகும்; ஏழைகளுக்கு நீதி, கருணை, சேவை வழங்கி இறையாட்சியை வாழ்வில் பிரதிபலிக்கவேண்டும்.”

நவ. 16, உலக வறியோர் நாள் திருப்பலி மறையுரை