சிறகொடிந்த பறவை போல்
சிறையுண்டு
கிடப்பவளே!
சுதந்திரம்
கிடைத்த பின்னும்
இயந்திரம்
போல் வாழ்பவளே!
மனம்
ததும்பி வெதும்புகையில்
பழுகிக்
காயும் காரிகையே!
உலகம்
உன்னைத் தூற்றினாலும்
காலம்தந்த
வலிகள்
தீர
சோகம்
உன்னை வாட்டும்போது-உன்
கண்ணீர்த்துளிகள்
மருந்தாகும்!
பீறிட்டு
ஒழுகும் குருதி போலப்
பொங்கியெழு
பொற்சிலையே!
இச்சைக்கு
இரையானாய் - பரத்தைப் பட்டம் நீ பெற்றாய்
செல்வம்
பணம் பகட்டின்றி - புகலிடம் என்று
இன்று
உண்டோ?
தென்றலாக
இருப்பவளே
கொடும்
புயலாக
எழுந்து
வா!
மெழுகாயுருகி
அழுதது
போதும்
சுட்டெரிக்கும்
கதிராய்
சுடர்வீச
வா!
பாலைவனமாக
இருந்தது
போதும்
விளைச்சல்
நிலமாகச்
செழித்திட
வா!
ஜன்னலுக்குள்
தோன்றி
மறையும்
நிலவைப்
போல்
வாழ்க்கையடி!
சாதிக்க
மனம் இருந்தால்
அகிலமே
உன் வசமாகுமடி
நமக்கும்
உண்டு சமநீதி
நாமும்
பெறுவோம் பொதுநீதி!
எழுத
முடியாப் புத்தகமாய்
முற்றின்றி
முடியாத்
தொடர்கதையாய்
முட்டி மோதிப்
பிழைத்தாலும்
- தலையில்
குட்டிக்
குட்டித்
தாழ்த்துவோன்
யார்?
வார்த்தையால்
மட்டும்
சமத்துவம்,
சுதந்திரம்
என்று
ஆகிடுவோம்?