news-details
வத்திக்கான் செய்திகள்
‘கல்வி கற்பித்தல் என்பது பணி மட்டுமல்ல, திரு அவையின் அடையாளம்’- திருத்தந்தை லியோ

நவீன கல்வியின் சவால்களுக்கு மத்தியில் கல்வியாளர்களின் அர்ப்பணிப்புமிக்க பணியை மனத்தாரப் பாராட்டுவதாகத் திருத்தந்தை லியோ தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் மாட்ரிட்டில் கல்வியாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்தியும், சில வழிகாட்டுதல்களை வழங்கியும் திருத்தந்தை லியோ செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மாநாட்டின் கருப்பொருளைச் சுட்டிக்காட்டி, “கிறிஸ்துவே நம் அடையாளம்; நம் கல்விப் பணியின் அடித்தளம். கற்பித்தல், குணம் மற்றும் அறிவு இரண்டையும் வடிவமைப்பதற்கான வழிகாட்டும் திசைகாட்டியும் அவரேஎனக் குறிப்பிட்டுள்ளார்.

திரு அவையின் பல்வேறு பணிகளில், கல்வியாளர்களின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த சான்றுஎன மேலும் தெரிவித்துள்ள திருத்தந்தை, “கிறித்தவ அடையாளம் அலங்காரச் சின்னம் அல்ல; மாறாக, கல்விப்பணியின் செயல்முறைக்கு ஆழமான அர்த்தம், முறையான திட்டம் மற்றும் தெளிவான நோக்கத்தை அளிக்கும் மையக்கருஎனவும் குறிப்பிட்டுள்ளார்.