news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்று நான் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டு கிரீமிலேயர், சமூக-பொருளாதார நிலையில் முன்னேறியவர்கள் பிரிவினருக்குச் சலுகைகளை இரத்து செய்ய முன்மொழிவதாக என்மீது குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசமைப்புப் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதை அவர்கள் அறியவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது தலைமைச் செயலரின் மகனுக்கும், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு தொழிலாளியின் மகனுக்கும் ஒரே இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது சரியாக இருக்குமா?”

உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்ப்பந்தம் மட்டுமல்ல; இது ஓர் அரசமைப்புச் சட்ட உத்தரவாதம். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் இல்லாதது காரணம் அல்ல; தொடர்புடைய நிறுவனங்கள் சட்டங்களைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் காரணம்இந்த நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல், குடிமக்களின் பங்கேற்பு மற்றும் நடத்தை மூலம் மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கியப் பாதையை அமைக்கவேண்டும்.”

உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சாதி, மதம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நல்லிணக்க ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பா...வினர் ஆளும் வட மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் நினைத்த காரியங்கள் ஈடேறலாம்; ஆனால், இங்கு அவர்களின் கனவு நிறைவேறாது. இது இராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே, மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணிக்காக்கப்படும். சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது எனப் பா... மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். உண்மையில் நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை; ஏதாவது ஒன்றை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சனாதனத்தை எதிர்க்கிறோம், சமாதானத்தைப் போற்றுகிறோம்.”

உயர்திரு. பி.கே. சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்