ஆண்டிற்கு ஒருமுறை வரும் விழாக்களின் வரிசையில் கடைசியில் நிற்கிறது கிறிஸ்துமஸ். இவ்விழா இயேசுவின் பிறப்பு விழா கொண்டாட்டம் மட்டுமே என்று எண்ணி நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உலகம் முழுவதிலும் ஆண்டின் மிகப்பெரும் செலவு விழா இது.
ஐரோப்பிய
நாடுகளில் அக்டோபர் முதலே விழாக்காலம் தொடங்குகிறது. முன்பு இல்லாதது போல இப்போது ஆண்டு முழுவதும் புதுத்துணிகளை வாங்கிக்குவித்த நமக்கு, ஏன் வேண்டும் மற்றொரு சோடி புதுத்துணிகள்? குடும்பமே புத்தாடைக் கொண்டாட்டத்தில் கடன் வாங்கிப் பொருள் வாங்கும் நோயிலிருந்து (Shopaholics)இந்த
ஆண்டு நலம் பெறலாமா?
குடும்பமாக,
குழுவாகக் கொண்டாடி மகிழ்வதில் யாருக்கும் தடையில்லை. ஆனால், கூட்டங்கூட்ட மாகச் சத்தத்தை மிகுதியாக்கிக் கொண்டு ‘நாங்கள் கொண்டாடுகிறோம்’ என்பதையும்,
தீபாவளி யைவிட அதிகப்படியான பட்டாசு வெடிகளை உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் - புத்தாண்டு நாள்களில் கொளுத்துகிறோம் என்றெண்ணும்போது, தலைநகர் டெல்லி போன்ற காற்று மாசுபாடு கூடிடும் நகரங்களில் இன்னும் பெரு கிட நம்மால் முடிந்த தீமை யையும் செய்துவிடுகிறோம் என்பதை எண்ணிப் பார்ப் போம்.
‘எப்படித் திடீரென வந்து விடுகிறது-கிறிஸ்துமஸ்-புத்தாண்டு நாள்களில் குதூகலம்? நமது கடன்கள் தீரவில்லை; நமது திட்டங்கள் நிறைவேறவில்லை; நமது உறவுகள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நிறைவைத் தரவில்லை; நமது இலக்குகள் நெடுந்தொலைவில் உள்ளன’
(செலவின் சுமையைத் தாங்க விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குரல் போல உள்ளதே!)
அதிகப்படியான
மக்காத குப்பைகள் (நெகிழி போன்றவை) அதிகரித்திடும் காலம் ஆண்டின் இறுதி பத்து நாள்கள் என்றால் அவற்றைக் குறைப்பதும், பரிசுப்பொருள்களை உறைகளில் போடும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, உள்ளவாறே பரிசுகளை அடுத்தவரோடு பகிர்ந்திடும் நற்செயலை கிறிஸ்துமஸ் - புத்தாண்டிலிருந்து நாம் தொடர்ந்திடுவோமா?
கிறிஸ்துமஸ்
என்றவுடன் கேக் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று
தோன்றுகிறதே! இக்காலத்தில் வீட்டிலேயே கேக் தயாரிப்பது எப்படி? என்று பல காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன.
உங்களுக்கும் நண்பர்களுக்குமான சிறிய அளவில் கேக் செய்வதை ஆண்டிற்கு ஒருமுறை கற்றுக்கொள்ளலாமே! இதனால் செலவு குறைவதோடு மட்டுமில்லாமல், பதப்படுத்தப்படும் ஊக்கிகள் கேக்கில் சேர்க்கப்படும்போது, அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் கவனத்தில் கொள்வோம்!
கிறித்தவ
ஆலயங்களில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்கள் கொண்டாட்ட உணர்வைப் பெற்றுத்தரும் என்றாலும், மொத்தக் கோவில் வளாகத்தை அலங்காரத்தால் நிறைத்துக் குப்பைகளை ஏற்படுத்துவது, தெர்மோகோல் போன்ற சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை அதிகம் பயன்படுத்துவது - இவற்றிலிருந்து நம்மை விடுவிக்கப்போவது யார்? கிறிஸ்துமஸ் குடில் என்பது இயேசுவின் பிறப்பு வரலாற்றை அழகுற எடுத்துக்காட்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பின் எளிமை என்பது ஒன்றுமில்லாமையிலிருந்து, ஆண்டவர் உலகத்தைப் படைத்ததை மீண்டும் நமக்கு அறிவுறுத்துவது என்ற எண்ணம் மறந்துபோய், இலட்சக்கணக்காய் பணத்தைக் குடில் செய்வதில் வீணடிப்பது கிறிஸ்து பிறப்புச் செய்திக்கு நேர் எதிரானது என்பதை நமது ஆலயப் பொறுப்பாளர்களிடமும் இளையோரிடமும் கூறுவது யார்?
சரி,
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கிறிஸ்துமஸ் விழா கூறும் எளியோரிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வதை எங்கிருந்து ஆரம்பிப்பது?
வசதியில்
குறைவுள்ளோர், நலிந்தவர், வீதியோரங்களில் வாழ்வோரைச் சந்திக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்வுகளை, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்பது போல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடலாமா? உடன் அமர்ந்து, அவர்களின் கண்களைப் பார்த்து உரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, முடியுமானால் இயன்ற உதவிகளைச் செய்வோமே!
இல்லாதவருக்கு
ஏதேனும் ஒன்றைக் கொடுத்து விடுவதால் நாம் வள்ளலாகிவிட முடியாது. நாம் கொடுப்பது அவர்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை, நாம் ஏதோ ஒருவகையில் பறித்ததைத்தான் என்று எண்ணிப் பார்ப்போம். கொடுப்பது நமக்கு முதலில் தாழ்ச்சியைக் கொடுக்கட்டும்.
சூழலியல்
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிய கட்டாயத் தேவை நமது பூமிப் பந்தை அண்டவெளியில் இன்னும் சிறிது காலம் வாழத் துணை செய்யும்.
வீசும்
எதிர்காற்று நமது செயல் வேகத்தைச் சற்றே வீரியமாக்கட்டும்!