திருமணத்தின் முக்கியத்துவத்தையும், கணவன்-மனைவி இடையே உள்ள புனிதமான பந்தம் குறித்தும் விளக்கும் வகையில், ‘ஒரு சதை’ (Una caro-cdh fhnuh) என்ற ஆவணம் வத்திக்கானில் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய
சூழலில் திருமண பந்தம் என்பது இரு மனங்களைக் கடந்து வேறு திசை நோக்கிச் செல்லத் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு காரணம் என ‘உனா காரோ’ ஆவணம் குறிப்பிடுகிறது. மேலும், திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மனரீதியாக, ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள இந்த ஆவணம்,
உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரையொருவர் தாங்கிப் பிடிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
திருமணம்
இருவருக்கும் இடையேயான வரம்பு, அதைக் கடந்த எதையும் திரு அவை அனுமதிக்காது எனவும், இந்தக் கோட்பாடுகளின் கீழ், கிறித்தவ நம்பிக்கையின் கீழ், தம்பதியினர் குழந்தைகளைப் பெற்று வளர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே காதல்வேண்டும்; அதே நேரம் அது பாலியல் தேடலுக்காக மட்டுமல்லாமல், அதையும் தழுவி மிக ஆழமான அன்பை வெளிப்படுத்தும் உறவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.