news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தற்போது பள்ளி மாணவர்களே கஞ்சா போன்ற போதைப்பொருள்களுக்கு அடிமையாகி  உள்ளனர். போதைப்பொருள்கள் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். போதைப்பொருள்கள் வைத்திருப்போருக்குக் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதைப் பயன்படுத்துவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கும் வகையில் புதிய சட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கங்கள் அமைப்பதையும், சாதி, மத ரீதியான மோதல்களைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.”

திரு. வைகோ (.தி.மு.. தலைவர்)

உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 90,000- கடந்துள்ளது. வழக்குகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன். உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பேன். இது தொடர்பாக அறிக்கை கேட்பேன்மத்தியஸ்தத்திற்கு முன்னுரிமை, தீர்வு காண்பதில் இது எளிமையான வழி. பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். முடிவெடுக்க முடியாத சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அடிப்படையில் அரசமைப்பு அமர்வுகளை அமைப்பேன். நீதித்துறை செயல்பாட்டில் நமக்கு எந்தளவிற்குச் செயற்கை நுண்ணறிவு அவசியம் என்பதற்கான எல்லைகளைப் பார்க்கவேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஒரு முழுமையான மற்றும் விரிவான பார்வையுடன் வழக்குரைஞர்களுடன் கலந்து பேசுவோம்.”                 

உயர்திரு. சூர்யகாந்த், (புதிய தலைமை நீதிபதி)

எஸ்..ஆர். என்பது மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி. பா... உள்நோக்கத்துடன்தான் எஸ்..ஆரைக் கையாள்கிறது. பா... அரசு அரசியல்  கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனங்களைச் செய்துகொண்டே எதிர்க்கட்சிகள் இதை நடைமுறைப்படுத்திதான் ஆகவேண்டும் என்கிற நெருக்கடியைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றனர். ‘முதலில் நீ இந்தியக் குடிமகனாக உறுதி செய்; பிறகு நீ வாக்காளரா என்று நாங்கள் உறுதி செய்கிறோம்என்பதுதான் எஸ்..ஆர். நடவடிக்கை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தது. எனவே, மறைமுகமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தேசியக் குடிமக்கள் பெயரேட்டை உருவாக்கவே எஸ்..ஆர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தில்லுமுல்லுகளைத் தேர்தல் ஆணையத்தின் மூலம் செய்து காண்பிக்கிறது. தேர்தல் ஆணையமும், பா...வும் ஒரே நிறுவனமாக மாறியுள்ளன.”

திரு. தொல். திருமாவளவன், (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)