2025, நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை துருக்கி மற்றும் லெபனானுக்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தைத் திருத்தந்தை லியோ மேற்கொண்டார். இந்த நிகழ்வு, கிறித்தவ ஒன்றிப்பை நினைவுகூருதல், மதங்களுக்கு இடையேயான உரையாடல், மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய செய்தியை வழங்குதல் ஆகிய கூறுகளை மையமாகக் கொண்டிருந்தது.
துருக்கியில்
(நவம்பர்
27 முதல்
- 30 வரை)
அங்காரா: தலைநகர் அங்காராவில் வரவேற்பு, முஸ்தபா கெமால் அதாதுர்க்கின் கல்லறைக்கு வருகை, ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் அரசு அதிகாரிகளுடனான சந்திப்பு. அங்குத் திருத்தந்தை சகோதரத்துவத்தின் பாலங்களைக் கட்ட அழைப்பு விடுத்தார்.
இஸ்னிக் (நைசியா):
முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமியூவுடன் சந்திப்பு. நைசியா முதல் திருச்சங்கத்தின் 1,700-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒன்றிப்பின் இறைவேண்டல் நிகழ்வு.
இஸ்தான்புல்:
நீல மசூதிக்குச் சென்றார். புனித ஆண்ட்ரூவின் திருநாளில் முதலாம் பர்த்தலோமியூவுடன் இறைவழிபாட்டில் கலந்துகொண்டார்.
லெபனானில் (நவ.
30 முதல்
- டிச.
2 வரை)
பெய்ரூட்:
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோசப் அவுன் அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை லியோ. பின்னர் தியாகிகள் சதுக்கத்தில் பல்சமய கலந்துரையாடலிலும் இறைவேண்டலிலும் கலந்துகொண்டார். இதில் சன்னி, ஷியா, ட்ரூஸ் மற்றும் பல்வேறு கிறித்தவத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ஹரிசா: ஹரிசாவில் உள்ள லெபனான் அன்னையின் ஆலயத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஆயர்களைச் சந்தித்துத் தங்க ரோஜாவை வழங்கினார்.
அன்னயா: செயிண்ட் மாரோன் மடாலயத்தில் உள்ள செயிண்ட் சார்பெல் மக்லூஃப்பின் கல்லறைக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இவ்வாறு செய்த முதல் திருத்தந்தை இவரே!
பிகெர்கே:
மாரோனைட் கூடாரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்தார். பழிவாங்கலுக்குப் பதிலாக அன்பைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
இறுதி நாள்
நிகழ்வுகள்
ஜல்.எல்.டிப்பில் உள்ள டிலா குரோயிக்ஸ் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளைச் சந்தித்தார்.
குண்டுவெடிப்பில்
சிதைவுற்ற பெய்ரூட் துறைமுக நினைவு சின்னத்தில் அமைதிக்காக இறைவேண்டல் செய்தார்.
பெய்ரூட்
கடற்கரையில்
1,50,000-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்களுடன் திருப்பலி நிறைவேற்றினார்.
போரை
நிராகரித்து, அமைதியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் மதங்களுக்கிடையே உரையாடல் மற்றும் நல்லிணக்கம் மலரவேண்டும் என்பதும் பயணம் முழுவதும் திருத்தந்தையின் செய்தியாக இருந்தது.