news-details
திருத்தூதுப்பயணம்
மொனாக்கோ நாட்டிற்குத் திருத்தந்தை லியோவின் திருத்தூதுப் பயணம்: அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு

திருத்தந்தை 14-ஆம் லியோ மார்ச் 28-ஆம் தேதி ஐரோப்பிய நாடான மொனாக்கோவிற்கு (Monaco) மேற்கொள்ளவுள்ள பயணத்திற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் திருத்தந்தையின் முதல் உலகளாவியப் பயணம் இது. “நானே வழியும், உண்மையும், உயிரும் (யோவா 14:6) என்ற திருவிவிலிய வசனம் இந்தப் பயணத்தின் மையக் கருத்து. ஹெலிகாப்டர் மூலம் காலை 9.00 மணிக்கு மொனாக்கோ சென்றடையும் திருத்தந்தை, முதலில் அந்நாட்டு இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட்டைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். தொடர்ந்து, அமல உற்பவ பேராலயத்தில் கத்தோலிக்கச் சமூகத்தினரையும், செயிண்ட் டிவோட் தேவாலய சதுக்கத்தில் இளைஞர்களையும் சந்தித்து உரையாற்றுவார். நண்பகல்ஸ்டேட் லூயிஸ் II (Stade Louis II) விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சிறப்புத் திருப்பலிக்குத் திருத்தந்தை தலைமை தாங்குவார்.