ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகம், தனது அனைத்துத் திரு அவைச் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், “தற்போதைய நிச்சயமற்ற சூழலில், அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்காகச் செபிக்கவேண்டும்; அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள்” என்று அவர் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறு பங்குத்தந்தையர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், “அரேபியாவின் அன்னை நம் அனைவரையும் பாதுகாப்பாராக” என்று கூறி, உலகளாவிய சமூகமும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.