news-details
சிறப்புக்கட்டுரை
இறை ஊழியர் லூயி மரி லெவேயின் கடைசிக் கடிதம்

பிரிட்டிஷ் இந்தியாவில் (1908) தமிழ்நாடு வந்து, துறவறப் பயிற்சி பெற்று, 1920-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 1921 முதல் ஆண்டாவூருணியின் பங்குப் பணியாளனாய்ப் பொறுப்பேற்று, 1943-ஆம் ஆண்டுவரை அரும் பணியாற்றி, சுதந்திர இந்தியாவில் (1943-56) இராமநாதபுரம், (1956-73) சருகணி எனப் பயணிக்கிறார். இக்காலகட்டத்தில் தொடர்பு சாதன வசதிகள் மிகக் குறைவு. ஆனால், அனைவரும் கையாண்டது கடிதத் தொடர்புதான்.

தம் கைப்பட உடன்பிறப்புகள், உறவினர்கள், உபகாரிகள், பங்கு அன்பர்கள் எனப் பல தரப்பினருக்கு இவர் எழுதத் தவறியதில்லை; அதே நேரத்தில் இவரை நோக்கி அயல்நாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. இவரது தமிழ்க் கடிதங்களை வாசித்துக் காட்டவும், தந்தை சொல்லச் சொல்லப் பதில் எழுதவும் வாய்ப்புப் பெற்ற சிறுவன் நான் (1968-71).

இயேசு சபையினர் இறந்த பிறகு அவர்களது அரிய பொருள்களை கொடைக்கானல், செண்பகனூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைப்பர். அவற்றில் கடிதங்கள் பெரும்பங்கு வகிக்கும். அப்படிப்பட்ட கடிதங்கள் பெரும்பாலும் பிறரால் எழுதப்பட்டவையாகவே இருந்ததுண்டு. ஆனால், தந்தை லெவேயைப் பொருத்தவரை பிறர் எழுதிய கடிதங்களோடு, இவர்தம் உறவினர்கள், உடன் பிறப்புகள், உபகாரிகள் எனப் பலருக்கும் தன் கைப்பட எழுதிய கடிதங்களும் காணக் கிடைப்பது வியப்பிலும் வியப்பே!

இவர் கைப்பட எழுதிய கடிதங்கள் முதன்மைக் குறிப்புகளாகும். எனவேதான் அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட விரும்பினேன். உண்மைத் தன்மையை நிலைநிறுத்தவும், தலத்திரு அவையில் இளைய தலைமுறையினர் இறை ஊழியரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் விரும்பித் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய விழைந்தேன். அதன்படி ஆண்டாவூருணி, பாளையங்கோட்டை, இராமநாதபுரம் பணித்தளங்களில் எழுதிய கடிதங்களைப் பிரித்தெடுத்துஇப்படிக்கு லெவே I, II, IIIஎன மூன்று நூல்களாக வெளியிட்டேன்.

தற்போது தந்தை லெவே ஆன்மிகக் குருவாக அனுப்பப்பட்ட சருகணியில் (1956-73) உள்ள கடிதங்களைக் கண்ணுற்றேன். 1968 முதல் 1971 வரை தந்தையின் பீடச்சிறுவனாயிருந்த எனக்கு அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளான 1972-73-இல் எழுதிய 28 கடிதங்களை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவை என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, உயிரோட்டமுள்ள அனுபவங்களாக இருந்தன. எனவேதான் அவற்றைத் தொகுத்துஇப்படிக்கு லெவே... IV (சருகணியின் புனிதம்: 1972-73) என்ற தலைப்பில் எழுத முற்பட்டேன். இதில் 23 கடிதங்கள் 1972-இல் எழுதப்பட்டவை; 5 கடிதங்கள் 1973-இல் எழுதப்பட்டவை. ஜனவரியில் மூன்றும் (8,24,31), பிப்ரவரியில் ஒன்றும் (14), மார்ச்சில் ஒன்றும் (14) என அமைகின்றன. மார்ச் 21-இல் விண்ணகப் பிறப்படைகிறார். எனவே, மார்ச் 14-இல் எழுதிய கடிதமே அவர் வாழ்வின் இறுதிக் கடிதமாகிப் போகிறது.

இங்குப் பிரெஞ்சு மொழியில் எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது; முதுமையின் காரணமாக முகவரி மட்டும் தந்தை லெவே எழுதியுள்ளார். கடிதத்தை உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன் சொல்லக்கேட்டு எழுதியிருக்கிறார். கடிதக் கட்டமைப்பில் பெரிய மாற்றம் இல்லை. சாதாரணமாகக் கடித முகப்பில் இடமும், தேதியும் குறிக்கப்பட்டிருக்கும். இங்கு உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன்புனித சவேரியார் ஆலயம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாஎன எழுதுகிறார்.

நல்ல மலம் கழிவதால் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவர் பலமுறை சோதிக்கிறார். இதயத் துடிப்பு சீராக உள்ளது.’

பழைய துணிகளை அடுத்த கப்பல் வழியாக அனுப்பும் தேதியைக் குறிப்பிடவும்.

புதிய மறைமாவட்டம் உதயமாகும் குறிப்பு உள்ளது. இதனடிப்படையில் தற்போதைய இல்லத் தலைவர் அருள்பணி. துரைராஜன் புதிய ஆயரை வரவேற்க முதன்மைக் குருவாக அப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தன் முயற்சியால் திருமண வாழ்வுக்குத் தயாராகும் இளம் தம்பதியினர் லூயிஸ் பஞ்சவர்ணம் திருமண நாளை தீர்மானம் செய்ய அமலவை அருள்சகோதரி. ஜோசப்பா ஞாயிறன்று அங்கிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.’

தற்சமயம் எனக்குப் பசி எடுப்பதில்லை. உன் போன கடிதத்திற்கு நன்றி. என் இதய ஆழத்திலிருந்து உன்னை ஆசிர்வதிக்கிறேன்.’

அன்புடனும் நன்றியுடனும் மாமா

லெவே சே.

என்று எழுதுகிறார்.

இறுதி மூச்சுவரை சமூக அக்கறை, அருள்பணியில் ஆர்வம், பாளையங்கோட்டை மறைமாவட்டம் உதயமாவதற்குப் பாராட்டு, உடல் நலன் ஒட்டிய சிந்தனைகள் என இவரின் ஒட்டுமொத்த ஆளுமையை வெளிக்கொணரும் இக்கடிதம்போல், தான் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வழியாகப் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். இருபாலரும் இறை அழைத்தலை உறுதியோடு ஏற்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான கடிதங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்இறை ஊழியர் விரைவில் புனிதராக உயர்த்தப்பட இறைவனை இறைஞ்சுவோம்.