திருத்தந்தை லியோ இந்த ஆண்டு ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வத்திக்கான் செய்தித்தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, மார்ச் 28 அன்று மொனாக்கோ செல்வதாகவும், நவீன காலத்தில் ஒரு திருத்தந்தை இந்நாட்டிற்குப் பயணம் செய்வது இதுவே முதல்முறை என்றும், கத்தோலிக்கத்தைத் தனது அரசு மதமாகக் கொண்டுள்ள இந்நாட்டின் அமைதி முயற்சிகளை ஊக்குவிக்க அவர் அங்குச் செல்வதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்
13-23 ஆகிய 10 நாள்கள் பயணமாக அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் ஈக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதாகவும், அவ்வாறே,
ஜூன் 6-12 ஆகிய நாள்களில் ஸ்பெயின் நாட்டில், பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற ‘சக்ரடா பேமிலியா’
பேராலயத்தின் புதிய கோபுரத்தைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் மேலும், ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோர் அதிகம் வரும் கேனரி தீவுகளுக்கும் அவர் பயணம் செய்ய உள்ளதாகவும் வத்திக்கான் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.