news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களால் சவால்கள் அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் உண்மையை நிலைநிறுத்தவும், தவறான தகவல்களைக் கண்டறிந்து உண்மையை விளக்கவேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. ஊடகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைச் சிந்தித்து, அதற்கேற்ப புத்தாக்கப் படைப்புத்திறன்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். செயற்கை நுண்ணறிவு, தரவுகள் பகுப்பாய்வு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளைக் கூறல், சமூக ஊடகத் தளங்கள் மூலம் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வெளிப்படுத்தும் உத்திகள், செய்திகளை மக்கள் நுகரும் விதம் போன்றவை பெரிதளவில் மாற்றம் கண்டுள்ளன. பேனாவின் சக்தி அபாரமானது. அச்சமின்றி உண்மையை எழுதுங்கள், நீங்களே வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவீர்கள். எண்ம (டிஜிட்டல்) சகாப்தத்தில் சமூக ஊடகங்கள் அவற்றின் பணிகளை விரிவுபடுத்தியுள்ள அதேசமயம், அவை தவறான தகவல்கள் மற்றும் ஒருசார்பு செய்திகளின் தாக்கத்தை அதிகம் கொண்டுள்ளன. இவை சமூகத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.”

திருமிகு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசுத் துணைத் தலைவர்

பா..., ஓர் அரசியல் கட்சி அல்ல; அது, விரும்பிய வடிவம் எடுக்கும் இச்சாதாரி நாகம் போன்றது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றவெறித்தனமானஇலக்கை அடைய பா... எந்த மட்டத்திற்கும் இறங்கும். கடந்த 12 ஆண்டுகளாக, திரிணாமுல் காங்கிரஸ்மீது விஷத்தைக் கக்கி வந்தனர். இப்போது திடீரெனப் பிரதமர் மோடியே அக்கட்சியைப் புகழ்ந்துள்ளார். இது மரியாதைக்காக அல்ல; காங்கிரசைக் குறைமதிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்பதற்காக (.. உச்சி மாநாட்டில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்). பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் வருவதால் பா...வின் கதை கணிக்கக்கூடியதே. காங்கிரஸ் தலைவர்கள் மீதான வழக்குகள் திடீரென வேகமெடுக்கும்.”

திருமிகு. பவன் கேரா, காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர்

உலகில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உள்ளது. இலத்தீன் மொழி அறிவியல் சிறப்பு; பிரெஞ்சு காதல் உணர்வு கொண்டது; ஸ்பானிஷ் மொழி தொடர்பு மொழியாக உள்ளது. உலகில் தமிழ்மொழி மட்டுமே பக்தி வளம் நிறைந்தது. அதனால்தான்தெய்வத் தமிழ் மொழிஎன அழைக்கப்படுகிறது.”

திருமதி. டாக்டர் சுதா சேஷய்யன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர்