news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (11.01.2026)

பாதிக்கப்பட்டோர் விரைவில் நலம் பெறவும், உயிரிழந்தோர் அமைதி அடையவும் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம்.”

டிச. 15, அர்த்தமற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கடவுளின் அன்பின் கொடை, அவர் சிறியவர்களுக்கும் வலுவற்றவர்களுக்கும் மிக நெருக்கமானவர்.”

டிச. 16, திருத்தந்தை கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சியில் உரை

இயேசுவின் உயிர்த்தெழுதல் மனித இதயத்திற்கு உண்மையான ஓய்வு, கடவுளின் அன்பில் மட்டுமே இருப்பதை உறுதிப்படுத்தும் நம்பிக்கையை அளிக்கிறது.”

டிச. 17, புதன் மறைக்கல்வி உரை

உண்மையான அமைதி வன்முறையற்றது. ஆயுதக் குறைப்பு உரையாடல், நம்பிக்கை வழியாகத் தனிப்பட்டும் சமூகமாகவும் வளர்க்கப்பட வேண்டிய ஓர் உன்னத அழைப்பு!”

டிச. 18, 59-வது உலக அமைதி, நாளுக்காக வழங்கிய செய்தி

இயேசுவின் வரவேற்பையும் புனித வாழ்வையும் நீதியின் அடிப்படையிலான அமைதியையும் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றவேண்டும்.”

டிச. 19, இத்தாலியக் கத்தோலிக்க இயக்கத்தின் குழந்தைகளுடன் சந்திப்பு

எதிர்நோக்கு மனிதகுலத்திற்கு நிரந்தரத் தேவை; மரியாவின் முன்மாதிரியில், விசுவாசிகளாகிய நாம் கடவுளின் அன்பு, அமைதி மற்றும் புதுவாழ்வை நம் செயல்களில் வெளிப்படுத்தவேண்டும்.”

டிச. 20, திருப்பயணிகளுக்கு வழங்கிய யூபிலி மறைக்கல்வி உரை

புனித யோசேப்பின் இரக்கம், துணிவு, நம்பிக்கை, கீழ்ப்படிதல் முன்மாதிரியைப் பின்பற்றி விசுவாசிகள் மன்னிப்பு, ஆதரவு, இறை உடனிருப்பை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தவேண்டும்.”

டிச. 21, மூவேளை இறைவேண்டல் உரை