news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (18.01.2026)

அருள்பணியாளர் நம்பகத்தன்மை, தொடர்ச்சியான உருவாக்கம், ஒன்றிப்புப் பணியுடன் திரு அவையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

டிச. 22, அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி குறித்த திருமடல் 

இரக்கம், ஒன்றிப்பு, மகிழ்ச்சி மற்றும் நற்செய்தி அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன், அதிகாரத்துவமின்றி உயிரோட்டமாய் திரு அவை செயல்படவேண்டும்.”

டிச. 22, உரோமைச் தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் சந்திப்பு

கிறித்தவ நற்பண்புகளை நம் இதயங்களில் கொண்டு, இருளைக் குறித்து அச்சம் கொள்ளாமல் ஒரு புதிய நாளின் விடியலைச் சந்திக்க நாம் புறப்படுவோம்.”

டிச. 25, கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி மறையுரை

கிறிஸ்துவின் பிறப்பு அமைதியின் பிறப்பு; இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை வழியாக உலகிற்கு உண்மையான சமாதானம் அருளும் மீட்பரின் அழைப்பாகும்.”

டிச. 25, தனது முதல்ஊர்பி எத் ஓர்பிஎன்ற சிறப்புச் செய்தி

புனித ஸ்தேவானின் சான்று வாழ்வு போல, துன்பத்திலும் ஒளியாம் கிறிஸ்துவைத் தேர்ந்து, அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவத்தில் கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வோம்.”

டிச. 26, சிறப்பு மூவேளை இறைவேண்டல் உரை

திருக்குடும்பத்தின் சான்று போல், நம் குடும்பங்களும் அன்பு, பணிவு, கீழ்ப்படிதல், செபம் வழியாக நற்செய்தியின்படி வழிநடப்போம்.”

டிச. 28, மூவேளை இறைவேண்டல் உரை