news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (25.01.2026)

சமூக சவால்களை எதிர்கொள்ள ஏழைகள்மீது அக்கறையுடனும் நேர்மையுடனும் மக்கள்நல நிர்வாகத்தை முன்னெடுப்போம்.”

டிச. 29, இத்தாலிய நகரத் தலைவர்களுக்கு வழங்கிய உரை

இறை மன்னிப்பு மற்றும் அன்பின் வழியே புதிய வாழ்வைத் தொடங்கி, பயணத்தின் இலக்காகிய கடவுளின் நிலையான ஒன்றிப்பை அடைவோம்.”

டிச. 31, புதன் மறைக்கல்வி உரை

பிரிவினைகளைக் கடந்து அமைதி, மன்னிப்பு மற்றும் நம்பிக்கையுடன் கூடிய உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.”

சன. 01, ‘கன்னி மரியா கடவுளின் தாய்பெருவிழா மூவேளைச் செபவுரை

இளைஞர்கள் இயேசுவுடனான இறைச்சந்திப்பின் மூலம் வாழ்வின் உண்மைப் பொருளைக் கண்டடைந்து, அச்சமின்றி இறைவிருப்பத்தை ஏற்கவேண்டும்.”

சன. 02, ‘SEEK 26’  மாநாட்டு   இளைஞர்களுக்குக் காணொளிச் செய்தி

இயேசுவின் பிறப்புச் செய்தியை இசையோடு இணைத்து, துயருறும் குழந்தைகளின் அமைதி மற்றும் நீதிக்காக அன்னை மரியாவிடம் பரிந்துரைப்போம்.”

சன. 03, சிஸ்டைன் சிற்றாலய இசைக்குழுவின் கிறிஸ்து பிறப்பு இசை நிகழ்ச்சி

இயேசுவின் மனுவுருவாதலின் மூலம் கடவுளின் நெருக்கத்தை உணர்ந்து நீதி, அமைதி மற்றும் எளியோருக்கான சேவையில் அர்ப்பணிப்புடன் வாழ்வோம்.”

சன. 04, மூவேளைச் செபவுரை