news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (04.01.2026)

இளைஞர்கள் அன்பு, தியாகம், தொண்டு, நம்பிக்கையில் வேரூன்றி கிறிஸ்துவில் அமைதியைக் கட்டி உலகிற்கு ஒளியாக விளங்கவேண்டும்.”

டிச. 1, லெபனோனின் பிகெர்கேவில் இளையோர் சந்திப்பு

மருத்துவச் சேவை கிறிஸ்துவின் இரக்கத்தின் சாட்சி; ஏழைகள், நோயாளரை அன்புடன் கவனிப்பது, மனிதகுலத்திற்கு நம்பிக்கையையும் உயிரையும் அளிக்கிறது.”

டிச. 2, பெய்ரூத்தில் பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சபையில் அருளுரை

அறிவியல் ஆய்வு கிறிஸ்துவின் பராமரிப்பால் ஊக்கமளித்து, ஏழைகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் முன்னிலைப்படுத்தி, மனிதகுல நலனுக்காகச் சேவையாற்றவேண்டும்.”

டிச. 4, இதயநோய் நிபுணர்கள் குழு சந்திப்பு

செயற்கை நுண்ணறிவு மனித மாண்பையும் பொதுநலனையும் முன்னிலைப்படுத்தி, விமர்சனச் சிந்தனை, பொறுப்பு மற்றும் உறவுகளை வளர்க்கும் கருவியாக இருக்கவேண்டும்.”

டிச. 05, ‘செயற்கை நுண்ணறிவு புவியின் பராமரிப்புமாநாட்டில் பங்கேற்பு

திருவருகைக் காலத்தில் தன்னலமற்ற சேவையால் இறையாட்சியில் பங்கேற்று, எதிர்நோக்கின் நற்பண்பை வாழ்வில் வளர்க்கவேண்டும்.”

டிச. 6, திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு யூபிலி விழா மறைக்கல்வி உரை

நம்பிக்கையாளர்களின் மனந்திரும்புதல், ஆன்மிகத் தயார்நிலை கொண்டு இயேசுவைப் பின்பற்றி, ஒளியாக உலகில் வழிகாட்ட வேண்டும்.”

டிச. 7, மூவேளை இறைவேண்டல் உரை