நமது வாழ்க்கை பல நேரங்களில் சிக்கல்கள், தடைகள் மற்றும் எதிர்மறைச் சூழ்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்களது முயற்சிகளில் வெற்றியடையாதபோது, வாழ்க்கை வெறுமையாக, குழப்பமாகத் தோன்றும். இந்நிலையில், சாலமோனின் ஞானநூலில் கூறப்படும் இறைவார்த்தை நமக்கு ஆழமான நினைவூட்டலைத் தருகிறது.
புனித பிரான்சிஸ்
அசிசியாரும்
ஆட்டுக்குட்டியும்
கடும்
குளிர்காலக் காலைப்பொழுதில் அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் ஓர் இளம் பிரான்சிஸ்கன் சகோதரருடன் அமைதியாக வழிப்பயணம் செய்து கொண்டிருந்தார். குளிர்காற்று முகத்தைத் துளையிடும் வகையில் வீசியது; பாதை கிட்டத்தட்ட வெறிச்சோடியிருந்தது. அந்த நேரத்தில், புனிதர் திடீரென்று நடையை நிறுத்தினார். மரவேலி ஒன்றின் அருகில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி உடல் நடுங்கிக்கொண்டு, பயத்தில் மூச்சை முட்டிக் கொண்டு ஒற்றையாய் தனியாகத் தவித்துக்கொண்டிருந்தது. அதன் மேனி முட்செடிக்குள் சிக்கியிருந்தது, அது முற்றிலும் உதவியற்ற நிலையில் பார்த்த புனித பிரான்சிஸ் கருணையுடன் முனைந்து அந்த ஆட்டுக்குட்டியை மெதுவாகத் தனது கரங்களில் தூக்கிக்கொண்டார். அப்போது உடன்வந்த இளம் சகோதரர் பயத்துடன் கேட்டார்: “அருள்தந்தையே பிரான்சிஸ், இது ஒரு சிறிய மிருகம்தானே! நாம் விரைந்து செல்ல வேண்டிய வேலையுண்டு; மக்கள் நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்” என்றார்.
உடனே
பிரான்சிஸ், “சகோதரனே! இந்த ஆட்டுக் குட்டி அதைப் படைத்த ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அளவற்ற அன்பு இந்த நொடியிலும் அதை வாழவைத்திருக்கிறது. அதை நாம் எப்படி உதாசீனப்படுத்தி கடந்து செல்ல முடியும்?” என்று கேட்டு, புனிதர் அக்கறையுடன் அந்த ஆட்டுக்குட்டியைத் தனது மார்பில் சாய்த்தபடி அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். உரிமையாளர் ஆழ்ந்த நன்றியுடன் அவரை வாழ்த்தினார்.
அந்த
நேரத்தில் புனித பிரான்சிஸ் மிக எளிமையாகக் கூறினார்: “இந்தச் சிறிய உயிரினத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; ஒவ்வொரு படைப்பும் ஆண்டவருக்குச் சொந்தமானது. கடவுளின் அன்பு எல்லா உயிர்களையும் ஒவ்வொரு கணமும் தாங்கி நிறுத்துகிறது.”
அன்று
நடந்த இந்நிகழ்வை அவருடன் பயணித்த இளம்சகோதரர் தனது நாள்குறிப்பில் இவ்வாறு பதிவு செய்தார்: “அந்த நாளில்தான் நான் இறைவார்த்தையை உண்மையாகப் புரிந்துகொண்டேன்.”
“ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன”
(சாஞா 11:26). இந்த இறைவார்த்தையில் கடவுளின் அன்பும் பராமரிப்பும் மனித வாழ்வின் அர்த்தமும் இணைக்கப்பட்டுள்ளன. புனித அகுஸ்தின் ஹிப்போ மற்றும் புனித பவுலின் கருத்தைப் போல, மனிதன் கடவுளின் படைப்பில் உயிர்ப்பெற்று வாழ்வது கடவுளின் கருணையால்தான் என்பதை மையமாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
1. கடவுள் அன்பில் உலகத்தை
நிர்வகிக்கிறார்!
கடவுள்
நம்மை அன்புடன் காப்பாற்றுகிறார். மனிதர்கள் சந்திக்கும் நோய், பிளவுபாடு, கஷ்டங்கள் போன்ற சூழ்நிலைகளிலும் கடவுளின் அன்பு நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சக்தியாக அமைகிறது. தூய ஆவியின் செயல்பாடுகளில் இயேசு கிறிஸ்து தமது அன்பை நோயுற்றவர்கள், காயமடைந்தவர்கள், பாவங்களில் விழுந்தவர்களுக்குக் காட்டினார் (மத் 14:14). தூய ஆவி இவ்வாறான அன்பின் செயல்களை ஆன்மிகப் பராமரிப்பு என வர்ணிக்கிறார். கடவுளே
உயிரின் முதன்மை ஆதாரம்; அவரது அன்பால் எல்லாப் படைப்புகளையும் பராமரிக்கிறார் எனக் கத்தோலிக்கத் திருச்சங்கக் கொள்கை கற்பிக்கிறது (Catechism of the Ctholic Church, 301).
2. கடவுள் அனைத்தையும் வாழவிடுகிறார்
‘நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்…’என்பது
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் கடவுளின் கையிலே பாதுகாக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல; விலங்குகள், இயற்கை வளங்கள், சுற்றுப்புறம் ஆகிய அனைத்தும் ஆண்டவரின் பராமரிப்பில் உள்ளன.
உலகில்
8.7 மில்லியன் உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்தும் கடவுளின் கரங்களால் பாதுகாக்கப்பட்டவை. இயற்கையின் அடையாளங்களையும் மனித வாழ்வையும் இணைக்கும் கருணை, கடவுளின் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டது. “நாம் வாழும் எல்லா நிமிடங்களும் கடவுளின் பரிசுதான்”
(1கொரி 10:31) என்கிறார் புனித பவுல்.
3. எல்லாம் ஆண்டவருடையவை
“ஏனெனில் அவை யாவும் உம்முடையன...” நம் செல்வம், திறமை, உடல் மற்றும் மனம் அனைத்தும் கடவுளுக்கே சொந்தமானவை. நமது வாழ்க்கையை நம்முடைய சொந்த முயற்சியாக மட்டுமே எண்ணாமல், கடவுளின் வழிகாட்டுதலின்படி வாழ்வது அவசியம். நமது முயற்சிகள் கடவுளின் நம்பிக்கையுடன் இணையும்போது மட்டுமே செம்மையாகும். மனிதர்கள் கடவுளை மறந்தால், இயற்கை, குடும்பம் மற்றும் சமூக உறவுகளில் சிக்கல்கள் உருவாகின்றன. “கடவுளின் மகிமை மனித வாழ்க்கையின் எல்லாப் படைப்புகளிலும் தெரியும்”
என்கிறது திருச்சங்கக் கொள்கை (CCC 294).
4. வாழ்க்கைக்கு எதிர்நோக்கு தேவை
வாழ்க்கைக்கு
ஒரு திசை, ஓர் எதிர்நோக்கு இல்லாவிட்டால், அது சோம்பல் மற்றும் குழப்பமாக மாறும். கடவுளை நம்பும் நம்பிக்கை மனிதர்களை சிரமங்களின் வழியாக நடக்க வைக்கும், சோதனைகளில் நிலைத்திருக்க உதவும்.
வாழ்க்கைப்
பயணத்தில் கடவுளின் அன்பை நினைவில் வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். எதிர்நோக்கு இல்லாமல் வாழும் வாழ்க்கை வெறுமை, குழப்பமான பயணம் போன்றதாகத் தோன்றும். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் கூறியதாவது: “வாழ்க்கையில் எதிர்நோக்கு இல்லாதவர் துயரத்தில் தவிக்கிறார்; கடவுளில் நம்பிக்கை வைத்தவர் மட்டுமே உண்மையான அமைதியைப் பெறுகிறார்.”
5. இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்பு
- நம்பிக்கையின்
ஆதாரம்
“தீமையின் இருள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பதாகத் தோன்றினாலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை ஆதரிக்கும் வலிமையாக உள்ளது. வாழ்க்கை மங்கியதாகத் தோன்றினாலும், அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார்” என்று
திருத்தந்தை லியோ வழங்கிய புதன் மறைக்கல்வி உரை, மக்கள் மனத்தில் கடவுளின் அன்பின் நிலையான நினைவூட்டலை உருவாக்குவதாக அமைகிறது.
சாலமோனின்
வார்த்தைகள் நமக்கு உண்மையை உணர்த்துகிறது: ‘கடவுள் உலகையும் உயிர்களையும் வாழவிட்டு, அனைத்தையும் தமது அன்பால் நிர்வகிக்கிறார். நம்முடைய வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவர் அன்பையும் கருணையையும் நம்மோடு வைத்திருக்கிறார்.’
நாம்
கடவுளின் அன்பை நம்பினால், எந்தச் சவாலையும் கடந்து வாழலாம். உலகின் அனைத்து உயிர்களும், மனிதர்கள், இயற்கை வளங்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்புகளும் அவரது கைகளில் பாதுகாக்கப்படுகின்றன.
6. வாழ்வின் திசையும் எதிர்நோக்கும்
உலகில்
பரவியுள்ள நம்பிக்கையின்மை என்ற நோய்க்கு எதிராக, நாம் வாழ்வை ஆபத்தில் கிடைத்த கொடையாகவும், மகிழ்ச்சியாக இருக்கவே நம்மைப் படைத்த தந்தையின் அன்பின் மீதான நம்பிக்கையாகவும் கொள்ளவேண்டும். கடவுள் “வாழ்க்கையை அன்புகூர்பவர்” (சாஞா
11:26).
இயேசு
கிறிஸ்துவே வாழ்வு; அவர் தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு அளித்தார். உருவாக்குவது என்பது (Creating) அன்பினாலும்
அன்பிலும் பிறரை வாழ்க்கையில் கொண்டு வருவதாகும். பொறாமைக்கு எதிராகக் கடவுளின் அன்பும் வாழ்க்கைத் திட்டமுமே உண்மையான வழி. உயிர்த்த இயேசுவே நமது நிரந்தர எதிர்நோக்கு. அவரே நம்முடன் நடந்து வருகிறார்!
ஆண்டவர்
அன்பில் வாழும் வாழ்க்கை நம்பிக்கை, பரிசுத்தம் மற்றும் ஆன்மிக வளர்ச்சியின் வழிகாட்டியாகும்.