உலக ‘ஹாலோகாஸ்ட்’ (Holocaust) நினைவு தினத்தை முன்னிட்டு, உலகில் இனி எந்தவோர் இனத்திற்கும் எதிராக இனப்படுகொலை எனும் கொடூரம் நிகழக்கூடாது என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்குக் காரணமான அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளை வத்திக்கானில் நடைபெற்ற வாராந்திரப் பொதுமறை உரையின்போது வேதனையுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “யூத எதிர்ப்பு உணர்வு, ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத உலகத்தை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்” என்று பரஸ்பர மரியாதை மற்றும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.