வத்திக்கான் செய்தித் தொடர்பகத்தின் (Holy See Press Office) புதிய துணை இயக்குநராக அருள்சகோதரி நினா பெனடிக்டா கிராபிக் (Sr. Nina Benedikta Krapic) என்பவரைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். 2019 முதல் இப்பணியில் இருந்த கிறிஸ்டியன் முர்ரேவுக்குப் பதிலாக இவர் 2026, மார்ச் 1 அன்று பொறுப்பேற்கிறார். குரோஷியா நாட்டைச் சேர்ந்த 36 வயதான அருள்சகோதரி நினா, சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். மக்கள் தொடர்பியலில் நிபுணத்துவம் வாய்ந்தவர். வத்திக்கான் தகவல் தொடர்புத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான சட்ட ஆலோசகராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.