ஆண்டவர் அருள்பொழியும் காலம் அதுவே தவக்காலம்!
மாண்பினை
நாம்பெறும் காலம் மீட்பரே அருளிய காலம்!
உன்னத
மாந்தராய் வாழ ஒறுத்தலைப் புரிந்திடும் காலம்!
விண்ணக
வாழ்வினில் செல்ல மன்னிப்பு ஏற்றிடும் காலம்!
பல்வகை
திறனிருந்தாலும் உள்ளத்தை உருக்கிடவேண்டும்!
நல்லிசை
போல் நாம் வாழ நம்மையே உணர்ந்திடவேண்டும்!
பாவத்தின்
கவர்ச்சியைவெல்ல பரமனில் இணைந்திடவேண்டும்!
சாபத்தின்
மோகத்தைக் கொல்ல திருநூல் செபம் செய்யவேண்டும்!
ஒப்புரவாவோம்
நாமே; எப்பிழை பொறுப்போம் தாமே!
தப்பறை
கொள்கைகள் தீங்கே; இப்புவிவாழ்வோம் பாங்கே!
ஒப்புயர்வற்ற
மறையை உயிரென எண்ணி வளர்ப்போம்!
இப்புவிவாழ்
எளியோர் ஏற்றம்பெற்றிட உழைப்போம்!
தனக்கென
வாழ்ந்திட வேண்டாம்;
பிறர்க்கென
வாழ்ந்திட பார்ப்போம்!
பிணக்குகள்
வழக்குகள் தவிர்ப்போம்; பிழைகளை,
குறைகளைப் பொறுப்போம்!
நாற்பது
நாள்களும் இணைவோம்; நல்லறம் புரிந்திட நினைப்போம்!
பயனுள்ளதில்
படிப்பதை நிலைப்போம்;
வாழ்வதில்
கொடுத்து மகிழ்வோம்!