1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது மரியாவின் வார்த்தைகளில் காணக்கூடிய ‘கன்னியாக நிலைத்திருப்பதற்கான’ அவரின் எண்ணம்தான் திரு அவையில் கிறித்தவக் கன்னிமைக்கான தொடக்கமாகக் கருதப்படுகின்றது.
மரியாவின் இந்த
முடிவில் புனித அகுஸ்தினார் கடவுளின் எந்தவொரு நிபந்தனையையும் காணவில்லை; மாறாக, அதில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட அவரின் ஒரு வார்த்தைப்பாட்டைக் கண்டார். இந்த வகையில், திரு அவையின் வரலாறு முழுவதுமே ‘புனித கன்னிகளுக்கு’ ஒரு
முன்னுதாரணமாக மரியாவைக் காண்பிப்பது சாத்தியமானது. “மரியா,
அவர் யாரைக் கருத்தரிக்கப் போகின்றார் என்பதை அறியாதபொழுதே அவரின் கன்னித்தன்மையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். ஆகவே, விண்ணக வாழ்வைப் பின்பற்றுதல் என்பது உலகு, நிலையற்ற உடல் சார்ந்த ஒரு வார்த்தைப்பாட்டின் மூலமோ, ஒரு கட்டளை அல்லது சேவை செய்வதற்கான ஒரு தேவை வழியாகவோ அல்ல; மாறாக, அன்பின் ஒரு தெரிவு வழியாக வந்ததொன்றாகும்” (De Sancta Virg., PL 40:398).
வானதூதர்
மரியாவை ஒரு கன்னியாக நிலைத்திருக்கக் கேட்கவில்லை. மரியாதான் கன்னியாக இருப்பதற்கான எண்ணத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றார். இந்த அர்ப்பணிப்பில் கன்னி வாழ்வால் கடவுளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவரை இட்டுச் செல்கின்ற அன்பின் தெரிவானது காணப்படுகின்றது. மரியாவின் முடிவு
இயற்கையான தன்மையை மையப்படுத்தி, ஒவ்வோர் அழைப்பின் வேராகக் கடவுளுடைய முன்னெடுப்பு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக, நாசரேத்து இளம் பெண்ணானவள் தனது உள் அழைத்தலுக்கு அதாவது, தூய ஆவியாரின் உந்துதலுக்கு அவரை அவருடைய கன்னிக் கொடையின் மதிப்பு மற்றும் அர்த்தத்தைப் பற்றி அறிவுறுத்திய அழைத்தலுக்குப் பதில் தந்து கொண்டிருந்தார். இந்தக் கொடையை அழைக்கப்படுவதை உணர்ந்தாலன்றி அல்லது தேவையான ஒளியும் மற்றும் திடனுமான தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டாலன்றி யாராலும் ஏற்க முடியாது.
கன்னி வாழ்விற்கான
ஒரு
தீர்க்கமானதொரு
முடிவை
மரியா
எடுத்தார்
2. புனித
அகுஸ்தினார் ‘வார்த்தைப்பாடு’ என்ற
சொல்லை முதன் முதலில் அவர்களின் வாழ்க்கை நிலையை ‘புனித கன்னிகள்’
என்று அவர் அழைத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருந்தாலும், மரியா திரு அவையின் தொடக்கக்
காலங்களிலிருந்தே அர்ப்பணத்தின் அல்லது ஒருவரின் வாழ்வைக் கடவுளுக்குக் கொடுக்கிறபொழுது, வழக்கத்திலிருக்கிற வார்த்தைப்பாட்டை எடுத்தார் என்பதற்கு நற்செய்தி நூலில் தெளிவான சான்றுகள் இல்லை. மரியா
கடவுளுக்கு அவரின் இதயத்தையே கொடுத்து கன்னியாக நிலைத்திருக்க, தனிப்பட்ட வகையில் முடிவெடுத்தார் என்பதையே நாம் திருவிவிலியத்திலிருந்து அறிகிறோம். ‘சீயோனுடைய மகளாக’ வாழ கொடுக்கப்பட்ட அழைத்தலை நிறைவுசெய்து, கடவுளின் நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக இருக்க மரியா விரும்புகிறார். இவ்வாறு அவரின் முடிவினால் கன்னித்தன்மையில் ஒரு பிளவுபடாத இதயத்தோடு கடவுளுக்குப் பணி செய்ய திரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் முன்மாதிரியாக அவர் ஆகின்றார்.
நற்செய்தி
நூல்களோ அல்லது மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களோ மரியா கன்னியாக நிலைத்திருப்பதற்கான முடிவை எப்பொழுது எடுத்தார் என்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இருப்பினும், அவர் மிகவும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வானதூதரிடம் அவர் கேட்ட கேள்வியிலிருந்து எளிதில்
உணரப்படுகின்றது. மரியா கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்த அவருடைய எண்ணமானது கால ஓட்டத்தில் முழு வளர்ச்சி பெற்றது என்பதைக் காண்பித்து, பரிந்துரைக்கப்பட்ட தாய்மையின் பார்வையில் அவர்
அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.
உண்மையில்,
கன்னியாக வாழ்வதற்கான மரியாவின் தேர்வானது
கடவுளின் தாயாக ஆவதன் எதிர்பார்ப்பில் முன்னரே உணரப்படாமல் செய்யப்பட்டதல்ல; மாறாக, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வுக்கு முன்பே அவரின் எண்ணத்தில் வளர்ந்து வந்ததாகும். இதிலிருந்து அவரின் இதயத்தில் இந்த விருப்பமானது, எப்பொழுதுமே இருந்தது என்பதை நாம் யூகிக்க முடியும்: அவரின் கன்னித் தாய்மைக்கு அவரை எந்த அருளானது தயாரித்ததோ அதே தூய ஆவியானவர் அவருடைய சிறு வயது முதலே அவரில் உந்துதலை ஏற்படுத்த இயலாமல் இருந்தபொழுதும் உண்மையில் அவரின் முழு ஆளுமை வளர்ச்சி மற்றும் கடவுளோடு கூடிய முழு ஒன்றிப்பிற்கான ஆர்வத்தையும் அவரில் ஏற்படுத்தியது.
3. கடவுள்
இன்றும் அநேக இளைஞர்-இளம் பெண்களின் உள்ளத்திலும் வாழ்விலும் செய்கின்ற அற்புதமானது மரியாவின் ஆன்மாவில் முதன் முதலில் உணரப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் அநேக மேலோட்டமான ஈர்ப்புகளால் தடம் மாறிப் போன நமது சமுதாயத்தில் கூட அநேக இளைஞர்-இளம்பெண்கள் மரியாவின் எடுத்துக்காட்டிலிருந்து
வருகின்ற அழைத்தலை ஏற்று அவர்களின் இளமையைக் கடவுளுக்காகவும் மற்றும் அவர்களுடைய சகோதர-சகோதரிகளுக்கான பணிக்காகவும் அர்ப்பணிக்கின்றார்கள்.
இந்தத்
தேர்வானது மனித மதிப்பீடுகளை நிராகரித்தல் என்பதைவிட, அது மிகப்பெரிய மதிப்பீடுகளின் தெரிவாகும். இந்த வகையில், எனக்கு முந்தைய வணக்கத்திற்குரிய திருத்தந்தை ஆறாம் பவுல் தனது அப்போஸ்தலிக்கப் போதனையான ‘மரியன்னை வழிபாட்டு மரபு’
(Marialis cultus)
என்ற ஏட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் திறந்த மனநிலையோடு இறைச் செய்தியின் சான்றுகளைப்
பார்க்கின்றார்கள் என்பதை
“கன்னி நிலைக்கான மரியாவின் தேர்வைத்…
திருமண நிலையின் எந்தவொரு மதிப்பீட்டையும் நிராகரிக்கும் ஒன்றல்ல; மாறாக, கடவுளின் அன்பிற்கு அவரையே முழுமையாக அர்ப்பணிப்பதற்காக அவர் செய்த துடிப்புமிக்க தேர்வு என்றே பாராட்டுவார்கள்” என்று
வலியுறுத்திக் கூறுகின்றார் (எண். 37).
சுருக்கமாகக்
கூற வேண்டுமானால், கன்னி நிலையின் தேர்வானது கிறிஸ்துவின்மேல் உள்ள முழுபற்றினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக, இது மரியாவில் வெளிப்படையாக
இருக்கின்றது. கிறிஸ்துவின் பிறப்பு
அறிவிப்பிற்குமுன் இதைப்பற்றி உணராமல் இருந்தாலும், கிறிஸ்துவினுடைய பின்னணியில் தூய ஆவியானது அவரின் கன்னி வாழ்வுக்கான அர்ப்பணத்தைத் தூண்டுகின்றது. அவரின் முழு இருத்தலிலும் மீட்பரும் மெசியாவுமானவரை வரவேற்பதற்கு அவர் ஒரு
கன்னியாக நிலைத்திருக்கின்றார். மரியாவில் தொடங்கிய
கன்னி வாழ்வானது இவ்வாறு அதன் கிறிஸ்து மைய பரிமாணத்தை
(Christocentric dimension)
வெளிப்படுத்துகிறது. மேலும், திரு அவையில் வாழப்படும் கன்னி வாழ்வுக்குக் கிறிஸ்துவின் தாயில் அதன் உன்னத மாதிரியைக் காண்கின்றது. அவரின் தனிப்பட்ட
கன்னி வாழ்வானது இறைத்தாய்மையோடு இணைக்கப்பட்டு
ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக நிலைக்கின்றது. மேலும், கன்னி வாழ்வுக்கான ஒவ்வொரு கொடைக்கும் அர்த்தம் மற்றும் வெளிச்சத்தைக் கொடுக்கின்றது.
கன்னிமை அர்ப்பணமே
ஆன்மிக
வளங்களின்
ஊற்றாக
இருக்கின்றது
4. திரு
அவையின் வரலாற்றில் எத்தனையோ இளம்பெண்கள் ஆண்டவருடைய தாயின் கன்னி இதயத்தின் அழகு மற்றும் மேன்மையை அவர்கள் தியானிக்கின்றபொழுது கன்னி வாழ்வின் மாதிரியைத் தழுவியதால் இறைவனின் அழைத்தலுக்கு முழு மனத்தோடு சம்மதம் தர தூண்டப்படுவதை உணர்ந்திருந்தார்கள்!
நான் திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல் ‘மீட்பரின் தாய்’ (Redemtoris Mater)
என்னும் சுற்றுமடலில் நினைவுகூருகின்றவாறு, “நாசரேத்து கனியின் எடுத்துக்காட்டிற்குப்
பின் குறிப்பாக இப்படிப்பட்ட கன்னி வாழ்வு ஒரு சிறந்த ஆன்மிகக் கனியின் ஊற்றாகும்: இது தூய ஆவியில் தாய்மையின் ஊற்றாக
இருக்கின்றது” (ஒப்பிடுக.
மீட்பரின் தாய், எண். 43).
மரியாவின் கன்னிமை
ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களிலும் கன்னி வாழ்விற்கான கொடையின் மீதான மதிப்பைத் தூண்டுகிறது. இது திரு அவையில் கடவுளுடைய எல்லா நிகழ்வுகளின் மீதான முதன்மைநிலையின் அடையாளமாகவும், வரவிருக்கின்ற வாழ்வின் முன் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றது. எனவே, இறையாட்சிப் பணிக்குக் கன்னிமையில் இன்றும் தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கும் தாராள உள்ளங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதேநேரத்தில், முன்னரே நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தன்
இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு (hedonism) மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) போன்றவை பல இளைஞர்-இளம்பெண்களைத்
துறவற வாழ்வைத் தழுவுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவதைப் போலத் தோன்றுகிறது. எனவே, மரியாவின் பரிந்துரை
வழியாகத் துறவற அழைத்தல் பூத்துக் குலுங்க இறைவனிடம் இடைவிடாது செபிப்போம். நமது செபங்களால் உந்தப்பட்டு அவர்கள், கிறிஸ்துவினுடைய தாயின் முகமானது தெய்வீகக் குருவைப் பின்செல்வதற்கு முயற்சிக்கின்ற அநேக கன்னியர்களில் எதிரொலித்து மனுக்குலத்திற்குக் கடவுளின் இரக்கம்
மற்றும் கருணையின் சின்னமாக இருப்பதை அவர்கள் தொடர்வார்கள்.
மூலம்: Pope John Paul II, Mary’s choice inspires consecrated virginity,
in «L’Osservatore Romano», Weekly Edition in English, 21 August 1996, p.7.