மனித வாழ்க்கை என்பது தனிமையான பயணம் அல்ல; அது ஒரு தொடர் பயணம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திசையை நோக்கியும், யாரோ ஒருவரைப் பின்பற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள சூழலாலோ அல்லது நாம் முன்மாதிரியாகக் கருதும் நபர்களாலோ செதுக்கப்படுகின்றன.
அரசியல்
தலைவர்கள் முதல் ஆன்மிக வழிகாட்டிகள் வரை அனைவரும் ஏதோ ஒரு தத்துவத்தைப் பின்பற்றியே செயல்படுகிறார்கள். எனவே, ‘நாம் யாரைப் பின்பற்றுகிறோம்?’ என்பது நம் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கேள்வியாகும்.
இன்றைய
நவீன உலகம் ஓயாத சத்தங்களாலும், திசைதிருப்பும் கவர்ச்சிகளாலும் நிறைந்துள்ளது. இத்தகையச் சூழலில், திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைத் துணையாகக் கொண்டு நமது சீடத்துவ வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.
1. திருவிவிலியப் பின்னணியில் சீடத்துவ
அழைப்பு
சீடத்துவம்
என்பது வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது ஒரு நபரைப் பின்பற்றி நம்மையே உருமாற்றிக்கொள்வது. திருவிவிலியத்தில் இதற்கு இரு பெரும் தூண்கள் சான்றாக உள்ளனர்:
அ) புனித
பேதுருவின்
அழைப்பு:
பலவீனத்திலிருந்து
பாறையாக...
கலிலேயக்
கடலோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சீமோனிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
(மத்தேயு 4:19) என்று இயேசு அழைத்தபோது, அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தன் வலைகளை விட்டுவிட்டுப் புறப்பட்டார். பேதுருவின் சீடத்துவம் ஒரே நாளில் முழுமை பெறவில்லை. அவர் இயேசுவை மறுதலித்தார், சந்தேகப்பட்டார், பயந்து ஓடினார். ஆனால், கிறிஸ்து அவரை மீண்டும் மீண்டும் தேடிவந்து, “நீ என்னை அன்பு
செய்கிறாயா?” என்று கேட்டார். பேதுருவின் பலவீனம் கிறிஸ்துவின் அன்பால் பலப்படுத்தப்பட்டது. இறுதியில், தன் வாழ்வையே சிலுவையில் பலியாகக் கொடுத்து, திரு அவையின் பாறையாக மாறினார். ஒரு சாதாரண மீனவர் உலகத்தையே மாற்றிய தலைவராக மாறக் காரணம், அவர் கிறிஸ்துவை வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்ததுதான்.
ஆ) புனித
பவுலின்
அழைப்பு:
எதிரியிலிருந்து
தூதராக...
திரு
அவையைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார். அந்த ஒரு சந்திப்பு அவரது வாழ்க்கையின் திசையை 1800 மாற்றியது. “வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர்
2:20) என்று அறிவிக்கும் அளவிற்கு அவர் கிறிஸ்துவின் பித்தராக மாறினார். தான் கற்ற கல்வி, அதிகாரம், கௌரவம் அனைத்தையும் கிறிஸ்துவுக்காகக் ‘குப்பை’ எனத் தள்ளினார். ஒரு சீடன் என்பவன் தன் பழைய அடையாளங்களைத் துறந்து, கிறிஸ்துவோடு இணைந்து புதிய படைப்பாக மாறவேண்டும் என்பதற்கு பவுல் ஒரு மாபெரும் உதாரணம்.
2. நவீன காலச் சவால்கள்:
சமூக
ஊடகத்
தாக்கம்
(Social Media Influencers))
இன்றைய
டிஜிட்டல் யுகத்தில், சீடத்துவத்திற்குப் புதிய சவால்கள் முளைத்துள்ளன. ‘Influencers’ எனப்படும்
சமூக ஊடகத் தாக்கம் செலுத்துபவர்களே இன்றைய இளையோரின் அன்றாட வழிகாட்டிகளாக மாறிவிட்டனர்.
•
போலி பிம்பங்களின் கவர்ச்சி: சமூக ஊடகங்களில் காட்டப்படும் வடிகட்டப்பட்ட (Filtered) அழகான
புகைப்படங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை இளையோரை எளிதில் கவர்கின்றன. இது அவர்களைத் தங்கள் உண்மை வாழ்க்கையின் மீது அதிருப்திகொள்ள வைக்கிறது. ‘அவர்களைப் போல வாழ வேண்டும்’
என்ற ஆசையில் இளையோர் நற்செய்தி கூறும் ‘எளிமை’ மற்றும் ‘பகிர்வு’ போன்ற விழுமியங்களை மறந்து விடுகின்றனர்.
•
நூதனப் போதனைகள்: எபிரேயர் 13:9 எச்சரிப்பது போல, இன்று பல நூதனப் போதனைகள்
வலம் வருகின்றன. “உன் இஷ்டப்படி வாழ்வதே சுதந்திரம்”, “நுகர்வுக்
கலாச்சாரமே மகிழ்ச்சி”
போன்ற போதனைகள் நற்செய்தியின் வேர்களை நீர்த்துப்போகச் செய்கின்றன. திரையில் தோன்றும் ஒருசில நிமிடக் காணொளிகள் வாழ்வின் உண்மையான அர்த்தத்தைத் திசைதிருப்புகின்றன.
3. வாழ்வால் சோதிக்கப்படும்
தலைமை
ஒரு
தலைவரின் உண்மைத் தன்மையை அவர் பேசும் வார்த்தைகளைவிட, அவர் வாழும் வாழ்க்கையே உறுதிப்படுத்துகிறது. புனித அன்னை தெரேசா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் பெரிய தத்துவ நூல்களை எழுதவில்லை; ஆனால், ஏழைகளிடையே அவர் காட்டிய அன்பு உலகின் மனசாட்சியை உலுக்கியது. அவர் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பின்பற்றினார்; அதனால் உலகம் அவரைப் பின்பற்றியது. நமது வாழ்க்கை கிறிஸ்துவை நோக்கிச் சாய்கிறதா? என்பதே இன்று நாம் எழுப்ப வேண்டிய வினா.
4. பதவி அல்ல, பணி
வாழ்வு
இன்றைய
உலகம் தலைமையை ஒரு ‘பதவியாக’
(Position) பார்க்கிறது.
ஆனால், நற்செய்தி தலைமையை ஒரு ‘வாழ்க்கை முறையாக’
(Lifestyle) முன்வைக்கிறது.
மேலாளராக இருக்கும் ஒருவர் தலைவராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரம் இல்லாத ஓர் எளிய மனிதர் தனது அன்பால் சிறந்த தலைவராக இருக்கமுடியும். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில், நாம் காலத்தின் அடையாளங்களை வாசிக்கவேண்டும். ஆனால், புதிய போதனைகள் என்ற பெயரில் நற்செய்தியின் வேர்களை நாம் இழந்துவிடக் கூடாது. நம் கால்கள் கிறிஸ்துவின் பாதையில் உறுதியாக இருக்கவேண்டும்.
5. மாறாத பேரன்பின் உறுதி:
இயேசு
கிறிஸ்து
மனிதத்
தலைவர்கள் மாறலாம், பலவீனப்படலாம் அல்லது ஏமாற்றலாம். ஆனால், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்”
(எபி 13:8). இது ஒரு தேக்கநிலை அல்ல; மாறாக, மாறாத பேரன்பின் உறுதிப்பாடு. அவர் உண்மையை மாற்றுவதில்லை, வழியை மங்கச் செய்வதில்லை. அவரே வழி, அவரே உண்மை, அவரே வாழ்வு.
6. புனிதத்தன்மையே புதிய பாதை
திருத்தந்தை
பிரான்சிஸ் தனது ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(Evangelii Gaudium) என்னும்
மடல் வழியாக, நற்செய்தி என்பது ஒரு கருத்து அல்ல; அது கிறிஸ்துவுடனான ஒரு ‘சந்திப்பு’
என்று அழைக்கிறார். திரு அவை என்பது வெறும் அமைப்பு அல்ல; அது ஓர் உரையாடல் மற்றும் பயணம். இன்றைய உலகுக்கு நீதி, அமைதி மற்றும் அன்பின் சாட்சிகள் தேவைப்படுகிறார்கள். இது புதிய சட்டங்களால் அல்ல; ஆழமான புனிதத்தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் சீடர்,
பின்பே
தலைவர்!
நாம்
ஒவ்வொருவரும் யாரோ ஒருவரைப் பின்பற்றுகிறோம். அதேவேளையில் யாரோ ஒருவர் நம்மையும் பின்பற்றுகிறார். நாம் எதைப் பின்தொடர்கிறோம் என்பதைவிட, யாரைப் பின்தொடர்கிறோம் என்பதே முக்கியம். டிஜிட்டல் உலகின் மாயச் சத்தங்களுக்கு மத்தியில், “மீனவனே, என் பின்னே வா” என்ற கிறிஸ்துவின் மெல்லிய குரலைக் கேட்போம். நாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, நம்மைப் பின்பற்றுபவர்களும் நம் வழியாக வாழ்வின் ஆண்டவரைச் சந்திப்பார்கள். மாறாத கிறிஸ்துவை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!