news-details
வத்திக்கான் செய்திகள்
“கிறிஸ்துவைப் போல உருமாறி புனிதர்களாக வாழுங்கள்” - திருத்தந்தை அழைப்பு!

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்றுவரும் குருக்களுக்கான மாநாட்டிற்குத் திருத்தந்தை லியோ செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். “தற்கால மதச்சார்பற்ற கொள்கைகளும் சவால்களும் குருக்களைத் திகைக்க வைக்கவேண்டாம். இறைவேண்டல் மற்றும் கிறிஸ்துவின் அருகாமையே மக்களின் இதயத் தாகத்தைத் தீர்க்கும். இன்றைய திரு அவைக்குத் தேவைப்படும் குருக்களாக மாற புனித அவிலா யோவானின் ஆலோசனையைப் பின்பற்றி முற்றிலும் இறைவனுக்கே உரியவர்களாக அதாவது புனிதர்களாக வாழுங்கள்என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், “வெறும் கடமைகளைச் செய்பவர்களாக இல்லாமல், நற்கருணையால் ஊட்டம் பெற்று கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்மறு கிறிஸ்துவாக (Alter Christus) மாறவும், ஆழமான செப வீரர்களாக இருங்கள்; இறைவனை ஆராதிக்க உங்கள் மக்களுக்குக் கற்றுக்கொடுங்கள்எனவும் திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்கொண்டார்.