“இந்தியாவில் இன்னும் மக்களாட்சி உயிரோடு (Survival) இருப்பதற்கான காரணம் என்ன? இந்தியர் சனநாயகவாதிகள் (Democratic) என்பதால் அல்ல; மக்களாட்சி என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதனை அறிந்து கொண்டதாயே!”
“மக்களாட்சி இந்தியாவைத் தத்தெடுக்கவில்லை (adopt); மாறாக, இந்தியர்தாம் மக்களாட்சியைக் கபளீகரம் செய்து கொண்டார்கள்.
காரணம் என்ன? ஏற்கெனவே கட்டிக்காக்கப் பெற்றுவரும் ‘இந்தியச் சமூக அமைப்பில் சிதைவு’ வந்துவிடக் கூடாது என்பதாலேயே.
இந்தியா
ஏற்றுக்கொண்ட மக்களாட்சி முறையில் இப்படி உள்ளடங்கிய ஓர் அரசியல் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
மக்களாட்சி
முறை நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட முறை இல்லையாம்! மக்களாட்சியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறோம். இந்தியச் சமூகம் மிகக் கவனமாகக் கட்டிக்காத்து வரும் வலுவான படிநிலை அமைப்பிற்கும் (Hierarchy) நாம்
ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும் மக்களாட்சிக்கும்
எங்கேயாவது ஏதாவது பொருத்தப்பாடு உள்ளதா?
சனநாயகம்
அல்லது மக்களாட்சி அது உருவாக்கிய குடிமக்களை ஏமாற்றுமா? ஏமாற்றும் வஞ்சனை இதன் உள்ளடக்கமாக இருக்க முடியுமா? மக்களாட்சி முறை அரசமைப்பு முறைகள் கண்ட அமைப்புகளுள் மிகக் குறுகிய தீமைகளைக் கொண்டது. எனவேதான், தீவிர மதவாதிகளும், மக்களாட்சித் தத்துவத்தை நம்பாத பாசிஸ்டுகளும் உலகப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளும் மக்களாட்சியைப் போற்றுகின்றனர், ஊக்குவிக்கின்றனர். மக்களாட்சியின் மகத்துவம் சமத்துவத்தில் உள்ளது. குடிமக்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. இம்முறைமையால் குடிமக்களே அதிகாரம் (empower) பெறுகின்றனர்.
மக்களாட்சியை
ஊக்கவிக்கவே தம் பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறி வரும் அதிகார சக்திகள், மக்களாட்சித் தத்துவத்தை எப்படி நம்பும்? அடிப்படை நம்பிக்கையே இல்லாத ஒரு பொருளாதார, அரசியல் அமைப்பு மக்கள் அதிகாரத்தைக் கட்டமைக்கும் ஒரு மக்களாட்சி தத்துவத்தை அல்லது கருத்தியலை எப்படி வளர்க்க இயலும்?
எப்படிச் சாத்தியம்?
இந்திய
அரசியல் வரலாற்றில் 2014- மிகப்பெரிய மாற்றத்தைக் கொணர்ந்த ஆண்டு ‘இந்தியக் குடிமக்களாகிய நாம்’ என்ற முழக்கத்தோடு அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் முகப்புரை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். இந்தியத் தேசியத் தலைவர்கள் மிகப்பெரிய கனவுகளோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதற்கான முகப்புரையையும் உருவாக்கிய நாள். இக்கனவு இன்று என்னவாயிற்று? அறிவிக்கப்பட்ட சனநாயகக் குடியரசும், அக்குடியரசின் அடிப்படைவாதமான சமத்துவமும், சமத்துவம் காக்கத் துணை நின்ற இறையாண்மையும் கேவலமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோடு,
இன்று அறிவிக்கப்பட்ட கொள்கையின் எந்தச் சுவடும் இல்லாமல், மக்களாட்சி சமயச்சார்பின்மை, சமத்துவம் என்ற சொற்களை அகற்றாமலே, இச்சொற்களைத் தாங்கி நிற்கும் மதிப்பீடுகளை உருத்தெரியாமல் அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் ஆற்றலை, ஓர் அழிவு ஆற்றலை, இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?
மக்களாட்சியின் மேன்மைமிகு குணங்களை
இந்தியா தத்தெடுத்திருந்தால் (adopt) இச்சோகம் நிகழ்ந்திருக்குமா? மக்களாட்சியின் தேர்தல் சனநாயகம் குடிமக்களின் தெரிவுசெய்யும் உரிமையைத் தந்தது என்பதனால், சனநாயகம் மிக உயரிய பண்பின் அடையாளமாக இருக்க, அப்பண்பு எதனையும் அகவயப்படுத்தாமல்,
வெறும் வடிவத்தை மட்டும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கில் பயன்படுத்தியமையால் விளைந்த தீமை இது.
இந்தியாவில்
சனநாயகக் குடியரசின் வீழ்ச்சியை எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் சனநாயகத்தின் வெற்றியை நாம் கொண்டாட முடியவில்லையே... ஏன்? நவீன சனநாயக முறை நம் மக்களுக்குப் புதியதாக இருந்தாலும், இச்சனநாயகம் அதன் முக்கிய மதிப்பீடுகளாக முன்வைக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்பன நம் நாட்டின் தொன்மையான இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளடக்கமாக இருந்தன என்பதனை மறுக்க முடியுமா? திருவள்ளுவர் தரும் அறக்கோட்பாடுகள் பல வெறும் பள்ளிப்
பாடங்களாகிப் போயின. சாதியம் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் கூட ‘பிறப்பொக்கும்’ என்று
கூறிய திருவள்ளுவன் குரல் இன்றுவரை அனைவரையும் தீண்டவில்லையே! அறவாழ்விற்கும் சமகாலச் சனநாயக வழிமுறைக்கும் தொடர்பு இல்லாதது போன்று ஒரு சூழல் உருவாக்கப்பட்டது எப்படி?
சனநாயகம்
சனநாயக் காப்பாளரின் (Democrats) இருப்பில்தான்
உயிர்பெறும். நாம் இன்று பேசும் சனநாயகத்தின் உயிர்ப்பற்றத் தன்மைக்குச் சனநாயகர்கள் (Democrats) இல்லாமையே
காரணம். நம் நாட்டின் ஆட்சி முறைக்கு (Governance) சனநாயக
முறை பயன்படலாம். சனநாயகத்தை மக்களின் வாழ்வறமாக மாற்றுவதற்கு (Way of life) இது
போதாது” - கிருஷ்ணகுமார்
(NCERT-யின் மேனாள் இயக்குநர் - செமினார். செப். 1999).
ஆட்சி
அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றவும், கைப்பற்றப் பெற்ற அதிகாரம் மூலம் ஆட்சியை நடத்தவும் சனநாயகம் பயன்படுத்தப்படுமானால் அது சனநாயகமே இல்லை என்பார் மேற்கண்ட கல்வியாளர்.
இந்திய
அரசமைப்பின் காவலராகக் கருதப்பெறும் அம்பேத்கர் அவர்கள் சனநாயகப் பாதுகாப்பிற்கான அரசமைப்புச் சட்டத்தைத் தந்த பின்பும், அவர் இந்தியச் சனநாயகத்தை ‘மேனா மினுக்கி’
(Top dressing)
என்றே வர்ணித்தார். சட்டங்களையும் நுணுக்கமான சட்டவிதிகளையும் மூன்றாண்டுகள் முந்நூறு நபர்களோடு அமர்ந்து உரையாடி உருவாக்கிய அம்பேத்கர் ஜோடனை இல்லாத சனநாயகம் உருவாக்குதலில் வெற்றி பெற்றதாகக் கருதவில்லை. அரசமைப்புச் சட்டம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், இச்சட்டங்களைச் சட்டத்தின் உள்ளடக்கத்தைக் கையாள்வோரின் நாணயத்திலும் நேர்மையிலும்தான் இதன் வெற்றியிருக்கிறது என்பர்.
இந்தியாவிற்குச்
சனநாயகம் என்பது மக்களின் ஏக்கத்தில் விளைந்த ஒன்றல்ல என்பர். முடியரசின் வன்மத்திலிருந்து விடுதலை பெற மக்கள் எழுப்பிய குரலுக்கான விடையாகச் சனநாயகம் உருப்பெறவில்லை. இந்தியச் சமூக அமைப்பு மாறவேண்டும் என்ற முழக்கம் சனநாயகத்திற்கான முழக்கத்துடன் எழவில்லை. பிரெஞ்சு தேசத்தில் எழுந்த மாபெரும் புரட்சியின்போது, அப்புரட்சியில் தம்மைக் கரைத்துக் கொண்ட மக்கள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் ஒப்பரிய விழுமியங்களை வாழ்வாக்கக் குரல் கொடுத்தனர். பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்றபோது இம்முழக்கங்களும் உயிர்பெற்றன.
இந்தியாவில்
அறிமுகமான சனநாயகம் வெறும் வடிவம் (Design). உள்ளடக்கத்தில்
எழவேண்டிய மதிப்புகள் எவையும் சுதந்திரத்தின் தேசிய முழக்கத்தில் இடம்பெறவில்லை. இந்தியச் சனநாயகத் தேடலுக்கும், சனநாயக அரசமைப்பிற்கும் இம்மதிப்பீடுகள் அடிப்படைக் கீதமாக இடம் பெறவில்லை, “இந்தியாவின் சனநாயகம் மேலிருந்து நடப்பட்ட (Impranted from above) ஒன்று.
இந்திய மண்ணில் இதற்கான இடம் இன்னும் உருவாகவில்லை. இந்தியாவில் சனநாயகத்திற்கான ஒரு மனோநிலை (trauperament) உருவாகாமலேயே நாம் சனநாயகத்தைப் பயின்று (Practice)) வருவது
ஓர் அதிசயமே (Miracle) என்பார்
ரஜினி கோத்தாரி.
இந்திய
விடுதலைக்குப் பின் பெற்ற சுதந்திரம் சனநாயகத்தை, சனநாயகக் குடியரசைத் தந்ததாக ஆனந்தப்பள்ளு பாட முனைந்தோம். விடுதலை பெற்ற இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று எண்ணியிருந்த
ஒரு குடியரசு, இந்துத்துவக் குடியரசாக மாறும் என்று கனவு கண்டோமா? குடிமக்களாகிய நாம்
ஏற்கெனவே வர்க்கம், வர்ணம் என்று பிளவுபட்டிருக்கும் நிலையில், மதவாதக் கருத்தியலின் தீவிர வளர்ச்சியில் மதரீதியாகப் பிளவுபடுத்தப்படுவோம் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறோமா? இந்தியச் சுதந்திரப் போரின் வெற்றி, சுதந்திரத்திற்குமுன் அல்லது பின் என்று இந்தியாவை அடையாளம் காட்டிய நிலையில், சுதந்திரம் பெற்ற இந்தியாவை அயோத்திக்குமுன் அயோத்திக்குப்பின் (நன்றி: சசித்தரூர் -the battle of belonging) என்று
வகைப்படுத்தப்பெறும் ஒரு கேவலமான நிலை உருவாகும் என்ற கனவு கண்டோமா?
ஆம்,
குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்? ஆம், குடிமக்கள் ஏமாந்து போயினர். அன்னை இந்திரா, ஓர் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தபோது, சனநாயகம் காக்கக் குரல் கொடுத்தோருள் இன்றைய ஆட்சியாளரும் உண்டு.
சிறை சென்றோரும் இவர்களும் உண்டு. சனநாயகம் காக்கவெனப் போராடிய பலருள் இவர்களும் உண்டெனினும், இன்று நடப்பது என்ன? இந்தியாவின் அவசர
நிலைப் பிரகடனத்தின் ஐம்பதாம் ஆண்டினை நினைவுகூரும் பிரதமர் மோடி, இந்தியச் சனநாயகத்தின் வலுவான உள்ளடக்கமே அவசர நிலை உருவாக்கிய எதேச்சதிகாரம் போக்கை உடைக்க உதவியது என்கிறார் இன்றைய ஆட்சி அமைப்பு அவசர நிலையைக் காட்டிலும் செழுமையானது. இந்தியா 1950-இல் ஏற்றுக்கொண்ட சனநாயகம் சரியானதாக இருந்திருந்தும் சனநாயகத்திற்கு முற்றிலும் முரணான ஆட்சி உருவாகியிருக்குமா?
எத்தனை
முறைதான் சனநாயகத்தின் பெயரால் ஏமாந்து
போவோம்? ஏமாற்றப்படுவோம்? தமிழக அரசியலில் மாற்றங்களால் ஏமாந்தோமா? ஏமாற்றப்பட்டோமா?
(தொடர்ச்சி அடுத்த இதழில்....)