news-details
வத்திக்கான் செய்திகள்
‘அமோரிஸ் லெதீசியா’ குறித்த அக்டோபர் மாநாட்டிற்கான ஆயத்த ஆவணம் வெளியீடு

குடும்பங்கள் குறித்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியஅமோரிஸ் லெதீசியா (அன்பின் மகிழ்ச்சி) எனும் திருத்தூது மடல் வெளியாகிப் பத்தாண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் அக்டோபர் 2026-இல் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஆயத்த ஆவணத்தை வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. திருத்தந்தை லியோ அவர்களால் கூட்டப்பட்டுள்ள இம்மாநாடு, வரும் அக்டோபர் 7 முதல் 14 வரை வத்திக்கானில் நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள கீழைநாட்டுக் கத்தோலிக்கத் திரு அவைகளின் தலைவர்களும், ஆயர் பேரவைகளின் தலைவர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பல குடும்பங்கள் நேரடியாகப் பங்கேற்றுத் தங்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.