news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

மின்வாரிய அதிகாரிகளில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் குளறுபடிகளால் மக்களுக்குத் தவறான கட்டணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் கணக்கீட்டில் பெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக மின்வாரியத் தலைமைப் பொறியாளரே ஒப்புக்கொண்டிருப்பது .வெ.. அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. எனவே, மின் கணக்கீட்டுப் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

திருமிகு. நயினார் நாகேந்திரன், பா... மாநிலத் தலைவர்

தமிழ்நாடு அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் ரூ.1.5 இலட்சம் கோடி வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். குறுவைச் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 சிறப்பு மானியம் வழங்கவேண்டும். பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவேண்டும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆக உயர்த்தப்படவேண்டும். அனைத்து வேளாண்மைப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும். நெல் கொள்முதல் கிடங்குகள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபர் மோசடிகள், போதைப் பழக்கம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபர் மோசடிகளால் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனர். எனவே, ஆன்லைன் மோசடிகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். போதைப்பொருள் மட்டுமின்றி, மதுப்பழக்கமும் போதைதான். போதைப்பழக்கம் ஒருவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல; குடும்பத்தை, சமூகத்தைச் சீரழிக்கும். எனவே, சாலை விபத்து, சைபர் குற்றம், போதைப்பழக்கம் ஆகிய மூன்று ஆபத்துகளிலிருந்தும் மாணவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, போதையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கவேண்டும்.”

திருமிகு. . அமல்ராஜ், சென்னை காவல் ஆணையர்